Headlines

பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி

ஊழியப் படையினரின் பங்களிப்பு பெறுமதி வழங்கும் தினமாக இன்றைய மே தினம் கருதப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில்; உழைக்கும் மக்கள் முழு சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைக்கு நன்றி பாராட்டும் நோக்கில் மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு பெறுமதி வழங்கும், அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும், அது தொடர்பிலான ஆக்கபூர்வமாக ஊடாடல்களை மேற்கொள்ளும் ஓர் தினமாக மே தினம்…

Read More

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படும்: பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கட்சிக்குள் கட்சியை திருத்தி அமைக்க முடியும். சிலர் இனவாதத்தை பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதி பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு தனது கூடியளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருப்பார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைய அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வற்வரி தொடர்பில் பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை

வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

Read More

மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையத்தை இயங்கச் செய்வதற்கும் இவ்விஜயம் உந்து சக்தியாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிஓயாவில்  நடைபெற்ற “இசுறுபுர” கிராம வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும்   நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

Read More

முஸ்லிம் நாடுகளுடன் ரணில் ஒப்பந்தம்

சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய…

Read More

சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என பிரதமர் இதன் போது சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்…

Read More

சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று (7) ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

சீனாவை சென்றடைந்தார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன வெளிவிவகார துணை அமைச்சர் கொங் சூவான் யூ மற்றும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரை பெய்ஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான…

Read More

இன்று பிரதமர் விசேட உரை

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கூடுவதோடு 2.00 மணிக்கு பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார். அதேவேளை இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல மேலும் தெரிவிக்கையில், இன்று செவ்வாய்க்கிழமை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற…

Read More

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாரம் மேற்­கொள்­ள­வுள்ள சீன விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்ளார். அது­மட்­டு­மன்றி பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களும் இந்த விஜ­யத்தின் போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. முத­லீ­டு­களை ஊக்­கு­வித்தல், பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு சிறு­நீ­ரக நட­மாடும் சேவை, விளை­யாட்டு கூட்­டு­றவு சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­வித்தல், தெற்கு அதி­வேக பாதைக்­கான இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தி கம்­பஹா அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடப் பகு­தி­க­ளுக்­கான நீர்­வ­ழங்கல் கடன் உடன்­ப­டிக்கை போன்­றன கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் புதன்­கி­ழமை…

Read More

புதிய கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்! பிரதமர்

நாட்டில் நீண்டகால கல்வித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் கல்வித் திட்டங்களில் துரிதமான மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சிறந்த தலைவர்கள் உருவாவதற்கு காரணமாக அமைவது கல்வியாகும். இந்த கல்வியை மேம்படுத்த புதிய கொள்ளைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர்…

Read More