Headlines

குமார் குணரட்னம் கைது தொடர்பில் பிரதமருக்குக் கடிதம்

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் கோராப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்கவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே கடந்த காலங்களில்…

Read More

அரசியல் கைதிகளுக்கு இன்று முதல் பிணை

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாட்­டுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்கக் கூடாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாடு இடம்­பெறும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்­த­நி­லையில் இவ்­வி­டயம் குறித்து தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிர­தமர் ரணில்…

Read More

பிரதமர் இன்று விசேட உரை

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டு நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முழுமைபடுத்தும் தொழில்நுட்ப பாதைக்கு ஒரு ஆய்வாக இதனை கருத்திற்கொள்ள முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின்…

Read More

மைத்திரி – ரணில் தலைமையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு

நாட்டின் தேசிய ஒற்­று­மையைக் காப்­பாற்றி, ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வகையில் எமது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி ­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார். நாட்டை மீட்­டெ­டுக்கும் பய­ணத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றா­கவே பய­ணிக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல்…

Read More

ரணிலிடம் அறிக்கை கையளிப்பு

கடந்த வியாழக்கிழமையன்று உயர்கணக்கியல் கற்கை நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இந்த அறிக்கையை கையளித்துள்ளார். இந்தநிலையில் அறிக்கையின் அம்சங்களை கொண்டு இது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கை பிழையானது என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் – பிரதமர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியகட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்துள்ளன. இதன்மூலம் கட்சிகளுக்கு இடையிலான பேதம் களையப்படுகிறது. எனினும், இதன் அர்த்தம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளுராட்சி மன்ற…

Read More