Headlines

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பிரதமர் அலுவலகத்தை நோக்கி பயணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த போதிலும், இன்று வரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் தற்போது 32000 வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்…

Read More

சொந்த இடங்களில் மீள்குடியேற்றுங்கள்! முஸ்லிம் அமைப்பு ஆர்பாட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றி பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி வடக்கு முஸ்லிம் அமைப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

Read More

பாரிய வாகன நெரிசல் : பல்கலைக்கழக திறக்குமாறு ஆர்ப்பாட்டம்

திறந்த பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நகர மண்டப சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகில் 11 மணிக்கு ஆரம்பமாகியது. கடந்த 22ஆம் திகதி, பல்கலைக்கழக மாணவர்களின் உடமைகள் சிலவற்றை நீக்குவதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சி செய்ததையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலையை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

நல்லாட்சியை முன்னெடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்  ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய ஒன்றினைந்த சிவில் அமைப்புக்கள்   நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  பயணிக்குமாறு வலியுறுத்தி  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது. மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படுகின்றமை, ஊழல் வாதிகளுக்கு எதிராக அரசின் மந்தமான விசாரனைகள், தனிப்பட்ட கட்சிகளின்  தேவைகளுக்கு ஜனநாயக தேர்தல்களை…

Read More

நல்லாட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள குழுக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைய உள்ளது. அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3…

Read More

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டம் சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. சவூதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அங்கிருந்த பொறுப்பதிகாரியிடம் தேசிய சங்க சம்மேளனம் கையளித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்வு…

Read More

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பு டொரிங்டன் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் தேவைக்கு அமைய ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய…

Read More

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை கண்டிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போதைய கட்டிடத்திற்கு வாடகை மற்றும் வரி செலுத்தப்படுவதில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இடமாற்றம் செய்யப்படவுள்ள பத்தரமுல்லை கட்டிடத்திற்கு வருடாந்தம் 50 இலட்சம் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகவும்…

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நடைபயணம் தொடர்கிறது

இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள நடைபயணம் நிட்டம்புவ நகரிலிருந்து இன்று தொடர்கின்றது. இந்த நடைபயணம் கண்டியில் ஆரம்பமாகியதோடு, தொடர்ச்சியாக 5 நாட்களாக கொழும்பு நோக்கி  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதிதிரட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும், மாலபே SAITM என்ற பட்டத்தை விற்பனை செய்யக்கூடாது போன்ற 6 கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டு இந்த நடைபயணம்…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று தீர்ப்பு!

தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்ப்பு இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது. தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 5ம் திகதி மாணவர்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தி செய்யப்பட்ட பரிந்துரைகள் தெடர்பில் இன்றைய தினம் தேசிய…

Read More