Headlines

அதிபர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு




நாடு முழுவதுமுள்ள அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெரிவிப்பதுடன் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அறிவிப்பதாகவும்,

விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்வதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப் பெரும உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று புதன்கிழமை (21.09.2016) காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய சுமார் 500 வரையான அதிபர்கள் ஜனாதிபதி காரியாலயம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

இவ்வாறு சென்ற ஊர்வலத்தைப் பொலிஸார் லோட்டஸ் வீதியில் வைத்து வழிமறித்தனர்.

இதன்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்கள் ஐவரை பொலிஸார் தமது வாகனத்தில் ஜனாதிபதி காரியாலயத்துக்கு ஏற்றிச்சென்றனர்.

ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெருமவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் சகல அதிபர்சேவைகளிலுமுள்ள அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துத் தொழிற்சங்க உறுப்பினர்களால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், எழுத்துமூல ஆவணமும் வழங்கப்பட்டது.

அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெரிவிப்பதுடன் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அறிவிப்பதாகவும் விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்வதாகவும் உறுதிமொழி வழங்கப்பட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *