Headlines

குவைத்தில் சிலிண்டர் வெடிப்பில் இலங்கையர் மரணம்

-ஆர்.கோகுலன் – குவைத்தின் கைதான் நகரில் இடம்­பெற்ற சமையல் எரி­வாவு சிலிண்டர் வெடிப்பு சம்­ப­வத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது. இந்தச் சம்­பவம் இலங்கை பிர­ஜைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. இதில் இலங்கை பிர­ஜைகள் இருவர் பலத்த காயங்­க­ளுக்குள்­ளாகி வைத்­தி­ய சாலையில் சிகிச்சை பெற்று வந்­துள்ள நிலையில் இவர்­களுள் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெலி­மடை குருத்­த­லாவை பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரே உயி­ரி­ழந்­ துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்…

Read More

சோகமயமான கல்குடா – தாய் தந்தை உள்ளிட்ட நால்வரின் சடலம் நல்லடக்கம்

கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது. இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் ஆயிரக்காணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றன. நேற்று முன்தினம் கல்குடா கடலில் குளிக்கச்சென்று நேற்று காணாமற்போன, 18 மற்றும் 21 வயதான சகோதரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்நிலையில், கடலில் மூழ்கி பிள்ளைகள் இருவர் உயிரிழக்க, அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை…

Read More

பாசிக்குடா கடலில் காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

பாசிக்குடா கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கி  காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாசிக்குடா கடலில் நேற்று மாலை குளிக்க சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்றைய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நீரில் அடித்து செல்வதை அவதானித்த கரையில் நின்ற நண்பன்  கூச்சலிட்டு ஊ ஏனையவர்களிடம் உதவி கேட்டுள்ளான். இதன்போது பிரதேசத்தின் மீனவர்களின் உதவியுடன் இரண்டு…

Read More

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6  பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார். வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.

Read More

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55…

Read More

மோட்டார் சைக்கிள் விபத்தால் 50 சதவீதமானோர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 50 சதவீதமானவர்கள்  மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனை வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் 666  பேர் மோட்டார்  சைக்கிள் விபத்தினால் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துகளில் பகல் வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 355  பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இரவு வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில்  311 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இரவு…

Read More

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி பலி

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மனநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவரது இறப்பு தற்கொலையா? அல்லது தவறி விழுந்தமையினாலா என்பது தெரியவரவில்லை எனவும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் கூறியுள்ளார். மேலும், மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கனடாவில் விபத்து – தாயும், மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர்…

Read More

ஒரு நாள் சிசுவை புதைத்த தாய் கைது

முஹம்மது முஸப்பிர் பிறந்து ஒரு நாளோயான ஆண் சிசுவை புதைத்தார் என்று சந்தேகிக்கப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (03) தெரிவித்த முந்தல் பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பிரதேசத்தில், தான் பிரசவித்த சிசுவை கடந்த வெள்ளிக்கிழமை (02) தன்னுடைய வீட்டு வளாகத்தில் தாயொருவர் புதைத்துள்ளார். இதன் பின்னர், சனிக்கிழமை (03) முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய், தனது குழந்தை இறந்து பிறந்ததால்…

Read More

பேராதெனியவில் துப்பாக்கிச்சூடு:கடை உரிமையாளர் பலி

கண்டி, பேராதெனியவில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்

-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…

Read More

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மரணம்

குவைத்துக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் ணாக தொழி­லுக்கு சென்று அங்கு மர­ண­ம­டைந்த இலங்கை பெண்­தொ­டர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாக வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு இலங்கை பணிப்­பெண்­ணொ­ருவர் இறந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் அவர்­தொ­டர்­பான வி­ப­ரங்­களை உறு­தி­செய்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. எனினும் அவர் வெள்­ளத்­தம்பி சித்தி ஷகீரா எனும் பெயரில் N…

Read More