Headlines

தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய அரசியல்வாதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக போராடிய மிக்சிக்கன் மாநிலத்தின் அரசியல்வாதி ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார். மிக்சிக்கன் மாநிலத்தின் பிரதிநிதியான 66 வயதுடைய பீட்டர் பெட்டாலியா என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வட மிக்சிக்கன் பகுதியில் உள்ள அதிவேக பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது டிரக் ஒன்று மோதியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பீட்டர் பெட்டாலியா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More

வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, பிரதி ஆணையாளர்களை நியமித்து சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கியமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று…

Read More

கட்டாரில் பொதுமன்னிப்பு  காலம் அறிவிப்பு!

கத்தார் நாட்­டுக்கு சென்று  சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்­காக 3 மாத பொது­மன்­னிப்பு காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. செப்­டெம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்­பொது மன்­னிப்பு காலம் நடை­மு­றையில் இருக்கும் என வெளி­நாட்டு வேலaை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கத்­தா­ருக்கு தொழி­லுக்­காக சென்று வீஸா காலா­வ­தி­யான நிலையில் அதனை புதிப்­பிக்­காது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்தப் பொது மன்­னிப்பு காலத்­தினுள் தத்­த­மது தாய் நாட்­டுக்கு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை,…

Read More

தம்புள்ளை பள்ளிவாசல் சட்டரீதியானது – வக்பு சபை தலைவர்

-நன்றி விடிவெள்ளி  தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் இட­மாற்றிக் கொள்ளத் தேவை­யான காணியைப் பெற்றுக்   கொள்­வது எமது உரி­மை­யாகும். வக்பு சொத்­து­களைப் பரி­பா­லிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மௌனம் காக்­காது சட்­ட­ரீ­தி­யாக போராட வேண்டும். இது விட­யத்தில் வக்பு சபை தேவை­யான அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்து அவர்…

Read More

உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள்

பொத்துவில்-14, அல்-நஜாத் வீதியை அல்லது பொத்துவில்-5 உல்லை சவாளை சேர்ந்த மர்ஹும் முகம்மது முஸ்தபா(தந்தை), முகம்மது அனிபா ஸபுரா பீபீ (தாய்) ஆகியோரின் மகனான முகம்மது முஸ்தபா முகம்மது ஸாஜித் (வயது-21) எனும் இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வேளையில் குறித்த இளைஞரின் சிறுநீரகத்தை சீராக்குவதற்க்கு சுமார் 2750000/= ரூபாய்கள் தேவைப்படுகின்றது. எனவே அன்புக்குரிய சகோதரர்களே குறித்த இளைஞன் சுகமாக அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும். உங்களால் முடிந்த நிதியுதவிகளை பின்வரும் விபரம் உடைய கணக்கிக்கு(வங்கி) அனுப்பி குறைந்தது share…

Read More

உறவை பலப்படுத்திக்கொள்ள இலங்கையும் பூட்டானும் இணக்கம்

இலங்கையும் பூட்டானும் தமக்கிடையே உறவுகளை பலப்படுத்திக்கொள்ள இணங்கியுள்ளன. இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவலக கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நிறைவுபெற்றது இதன்போது பூட்டானின் குழுவுக்கு அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் சேரிங் டொர்ஜி தலைமை தாங்கினார். இலங்கை குழுவுக்கு வெளியுறவு அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகிஸ்வரா தலைமை தாங்கினார். கலந்துரையாடல்களின்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலா, பொருளாதார ஒத்துழைப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. இதேவேளை இலங்கையில் தற்போது மருத்துவப்பட்டப்படிப்பு உட்பட்ட பல துறைகளிலும் சுமார்…

Read More

தினமும் ஓதுவோம் திருமறையை!

தினமும் ஓதுவோம் திருமறையை! ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) மதனீ, வசனங்கள்: 129 (03-04) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) 9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி, வாழைச்சேனை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் வாழைச்சேனை அல் ஸபா ஆழ்கடல் வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று 19.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More

இது தான் இஸ்லாம்..!நேபாளுக்கு விரைந்து உணவு வழங்கியது பாகிஸ்தான் விமானம்….!!

உலக ஊடகங்களால் தீவிரவாத நாடாகவே காட்டப்பட்ட பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகின் எந்த நாட்டு ஊடகங்களும் காட்டியதில்லை. இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளிலும், இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடான பாகிஸ்தான், இந்தியாவின் துயரத்திலும், நேபாளின் துயரத்திலும் பங்கெடுத்துக்கொண்டு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகிய நேபாள் நாட்டிற்கு உணவு பொருட்களை விமானம் மூலம் ஏற்றி அனுப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டது….

Read More

அரசியல்வாதிகள் எனது கடமைகளில் தலையிட்டனர்

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கட­மை­களை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. பல அர­சி­யல்­வா­திகள் கட­மையின் போது தலை­யீ­டு­களை செய்­தனர் என்று நேற்று ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் தெரி­வித்தார். அர­சியல் தலை­யீ­டு­களை நான் தைரி­யத்­துடன் எதிர்­கொண்டேன். எனினும் சட்­டத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட மறுத்தேன். இதனால் பல சவால்­களை எதிர்­கொள்ள நேர்ந்­தது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார். கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­ன­ரான…

Read More

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான ஒன்றுகூடல்!

ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S. அமீர் அலி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான M.S. சுபைர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள்வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக…

Read More