Headlines

டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த வடகொரியா

அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிற வடகொரியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் சேர்ந்து அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளர் டொனால்டு டிரம்ப், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் பேசுவேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வடகொரியாவுடன் நேருக்கு நேர் பேசுவேன்” என…

Read More

அனைத்து முன்பள்ளிகளையும் மூடத் தீர்மானம்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கிழக்குமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முல்லைத் தீவில் கோவில் நிர்மாணிப்பு பணிக்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஹூனைஸ் பாறுக்கால் நதி ஒதிக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்மாணப்பணிகளுக்கென ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தயாநந்தன் தெரிவித்தார். குறித்த ஆலயநிர்மாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் வைபவரீதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.   இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கிணங்க வன்னி…

Read More

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம். ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்.

சுஐப் எம் காசிம்   இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில்…

Read More

முசலி முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு விடிவை ஏற்படுத்த அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

முசலி பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களால் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தீர்வு காணும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் , மக்கள் தற்காலிகமாக வசிக்கும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவர்களுக்கான குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

Read More

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச  நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாகஇலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்….

Read More

எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர்….

–    இர்ஷாத் றஹ்மத்துல்லா – எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம்…

Read More

நோன்பின் சில சட்ட திட்டங்கள்.. (கட்டாயம் வாசிக்கவும்)

நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக ஒரு வணக்க ரீதியில் தடுத்துக்கொள்ளல்”.என்பதாகும்.இது இஸ்லாதின் அடிப்படை வணக்கங்களில் ஒன்று.இதை அல்லாஹ் அவனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது.”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதியாக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராக  ஆகலாம்.)2:185(.இதை நபிகயளார் குறிப்பிடும் போது “இஸ்லாம் ஐந்து…

Read More

மஹிந்தவின் வெற்றிவிழா நாளை குருநாகலில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை.  இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை 19ஆம் திகதி குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர். எனினும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read More

நிந்தவூர் பிரதேச சுற்றுச்சூழல், சுகாதார மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

-முர்ஷிட்- நிந்தவூரின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது நிந்தவூரில் காணப்படும் உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள், வடிகான்கள், தெருக்கள், மர ஆலைகள், கடற்கரை, விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை மற்றும் மடுவம் போன்றவற்றின் பொதுச் சுகாதார நிலைகள் மற்றும் அவற்றின் மேம்பாடு தொடர்பிலும், தின்மக்கழிவகற்றல் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read More

படுகுழியில் விழப்போகும் மஹிந்த

-M.I.முபாறக் – அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்ற விசாரணை போன்ற தேசிய பிரச்சினைகளை விடவும் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியாக இருப்பது மஹிந்த தரப்பின் கூத்துத்தான். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுதல் அல்லது அக்கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்ற நோக்கில் அவர்கள் செயற்படுவதே இதற்கு காரணம். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுவது முடியாத காரியம் என்றாலும் புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்பது சாத்தியமே.அவ்வாறு புதிய கட்சி ஒன்று உருவாகும்போது…

Read More