Headlines

குசல் பெரேராவின் தடை நீக்கம்




இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான  குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய குசல் பெரேராவுக்கு  ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழையானது என்று அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் சபையால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *