Headlines

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்




இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார்.

இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *