துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து அனுப்பியது!
துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து விமானம் மூலம் அனுப்பியது! மேலும் நேபாளிகள் நேபாளத்திற்கு 5 நிமிடம் இலவசமாக எடிசலத் மூலம் பேசிக்கொள்ளலாம்.
துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து விமானம் மூலம் அனுப்பியது! மேலும் நேபாளிகள் நேபாளத்திற்கு 5 நிமிடம் இலவசமாக எடிசலத் மூலம் பேசிக்கொள்ளலாம்.
நாட்டில் அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முஸ்லிம் சமய விவகார அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வக்பு சபையும் வக்பு ட்ரிபியுனலும் வக்பு சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு இணங்கியுள்ளன. இச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீன் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றினை நியமித்துள்ளார். வக்பு சட்டத்தின் கீழேயே வக்பு ட்ரிபியுனல் (வக்பு நீதிமன்றம் ) இயங்கி வருகிறது. வக்பு சட்டத்தின் கீழ் பள்ளிவாசல்கள்…
அம்பாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர் என கூறப்படும் இராணுவ கொமாண்டோ படையணியின் கோப்ரல் தர வீரர் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைகளில் குறித்த இராணுவ கொமாண்டோ படையணியின் கோப்ரல் தர வீரரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்கு மூலம் ஒன்று…
அரசியல் ஆசை இருந்தாலும் மக்களின் ஆதரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றும் அக்கட்சி சவால் விடுத்தது. தான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின்…
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் கைதில் இருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடுவந்து பின் அது விளையாட்டுத் துப்பாக்கி எனக் கூறியவர் இந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த 10 வருடங்களில் இடம்பெற்றுள்ள பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலான நாடுகளிடம் பயிற்சி பெற்ற விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். நாட்டில் மீண்டும் ஊழல், மோசடிகள் இடம்பெறாத வகையில் விசேட விசாரணைப் பிரிவொன்றை இந்த வருடத்துக்குள் நிறுவவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபா நாயகர் சந்திம…
தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார். பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் படுகொலை குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த ஹிருணிகா பிரேமசந்திர, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த துமிந்த சில்வா எம்.பி, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘எனக்கு எதிராக சேறு பூசுவதால் நான் அஞ்சப்போவதில்லை….
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று…
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிராக வாக்களித்தவர் சரத்வீரசேகர எம்பியாக இருக்கலாம் என்று பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிபிட்டார். இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்…
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத்தால் பால்டிமோர் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில்…
நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. 19வது திருத்தச் சட்டமூலம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் தஇன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள…