19ஐ தோற்கடிப்பதற்கு மஹிந்த ஆதரவுக்குழு இறுதிவரை செய்த சூழ்ச்சி
அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இறுதி வரையும் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா நேற்றுத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டு மக்கள் பெரிதும் சந்தோஷப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் யாப்பு திருத்தம் நேற்று முன்தினம் இடம்பெற்றது….
