Headlines

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்க, பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடாத்திய அமெரிக்கா..!

பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க  புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 10 ஆயுததாரிகள் உயிரிழந்தனர். அந்த மாகாணத்திலுள்ள தத்தா கேல் நகரையொட்டிய அல்வாரா மாண்டி பகுதியிலிருந்து ஒரு குடியிருப்பைக் குறிவைத்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் ஆளில்லா விமானம் தாக்குதல் நிகழ்த்தியது. இதில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 10 உயிரிழந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இதே பகுதியில் கடந்த மாதம் 6-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பேர்…

Read More

குரோத அரசியலை கைவிட வேண்டும்!- தலதா அதுகோரள

அரசியல் கட்சிகள் குரோத அரசியலை கைவிட வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல, கந்தேகெதரவத்த, உடுகல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரோத அரசியலை புறந்தள்ள வேண்டியது அவசியமானது. பழி வாங்கும் எண்ணத்தில் அரசியல் செய்யக் கூடாது, அதில் பயனில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த சாந்த…

Read More

மஹிந்தவின் அலுவலகத்திற்கருகில் ஒருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்திற்கருகில் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

தரம்குறைந்த தலைக்கவசங்களை அகற்ற நடவடிக்கை

சந்தைகளில் காணப்படும் தரம்குறைந்த தலைக்கவசங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா நியமங்கள் நிறுவனம் அல்லது நுகர்வோர் அதிகார சபையுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின் பணிமனை அங்குரார்ப்பணம்!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனை ஒன்றை அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், தூய காங்கிரஸின் பிரமுகருமான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின்…

Read More

“நாட்டின் தேசிய பாதுகாப்பில், விழிப்புடன் செயற்படும் இராணுவம்”

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு  குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டுவருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலோரப் பகுதிக்கு அருகாமையில் உச்சிப்புளி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் 75 சயனைட் குப்பிகள், 7 கைத்தொலைபேசிகள், 300 கிராம் சயனைட் பவுடர் உட்பட மேலும் பல பொருட்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்தனர். இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராணுவ ஊடகப்பேச்சாளர்…

Read More

இன்டர்நெட் சென்டரில் குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் வீடியோகேம் விளையாட சென்ற சீனப்பெண்

இன்டர்நெட் சென்டரில் பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு வந்துள்ளார். அங்கு பொழுதை போக்குவதற்காக கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடத் தொடங்கிய அவர், சற்று நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். (அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் நிறைமாத…

Read More

சீன கோடீஸ்வரரை செவ்வி கண்ட ஒபாமா

ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான்  செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள்,  ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும்…

Read More

ஞானசாரவை குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு

கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார். வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில்…

Read More

தொழிலுக்காக சவுதி அரேபியா செல்பவர்களுக்கு புதிய நடைமுறை

தொழில் நிமித்தம் சவுதி செல்லும் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களுக்கு வீசா வழங்கும் முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொழில்வாய்ப்பிற்கு பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தொழில்  வழங்குனர்களின் செலவை குறைத்துக்கொள்வதும், பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கைக்கான காரணமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைமை அந்நாட்டு தொழிற்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையின் ஊடாக பணியாளர் ஒருவரை அமர்த்துவதற்கு சவுதி குடும்பமொன்று செலவிடும்…

Read More

துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெய மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

கெஹலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More