Headlines

அம்பன்பொல லங்கா சதொச திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு-  குருநாகல் அம்பன்பொல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.        

Read More

தென் கொரியாவில் வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் மர்ம நோய் ஒன்று தாக்கியது. அது புது வகை கிருமியால் உருவாகியிருந்தது. இந்த நோய்க்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் தாக்கியவர்களில் பலர் உயிரிழந்தனர். அங்கிருந்து ‘மெர்ஸ்’ நோய் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் இதுவரை 1167 பேரை ‘மெர்ஸ்’ நோய் தாக்கியது. இதில் 479…

Read More

சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு-15 இல் அமைந்துள்ள ‘சத்திரு செவன’ அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்று, பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பாயிஸ்…

Read More

100 நாள் திட்டத்தை முழுமையாக நாம் நிறைவேற்றியுள்ளோம்

மக்­க­ளுக்கு நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முழு­மை­யாக நிறை­வ­டைந்­த­துள்ளது. கொடுத்த வாக்­கு­று­தி­களை செய்து காட்டி விட்டோம் என அர­சாங்கம் தெரி­வித்­தது. 19ஆவது திருத்தம் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலையில் அதையும் நிறை­வேற்­றி­விட்டு பொதுதேர்­த­லுக்கு செல்­வதா­கவும் குறிப்­பிட்­டது. அர­சாங்க தகவல் திணைக்­களத்தில் இடம்­ பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்; நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை முழு­மை­யாக முடித்துவிட்டோம்.நாம் மக்­களின் வாழ்­வா­தார…

Read More

தேசிய நிறைவேற்று சபை கூடியது

தேசிய நிறைவேற்று சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது கூடியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தேசிய நிறைவேற்று சபை, இரண்டு வாரங்களுக்கு பின்னரே கூடியிருக்கின்றது. இந்த தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி) அறிவித்திருந்த நிலையிலேயே நிறைவேற்று சபை கூடியுள்ளது.

Read More

“முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருகிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மன்னார், மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலீபா மரைக்கார் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “மர்ஹூம் இக்பால் ஹாஜியார் அவர்கள் முசலி பிரதேச சபையின் உறுப்பினராகவும் சமூர்த்தி அதிகாரியாகவும் இருந்து, அந்தப் பிரதேச மக்களின் நலனுக்காகப் பணிபுரிந்தவர். முசலியின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட அன்னார், புத்தளத்திலும் வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும்…

Read More

பொன்சேக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று…

Read More

இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டம்: களுத்துறை,காலி மற்றும் மாத்தறைமாவட்டஇளம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

எம்.ரீ.எம்.பாரிஸ் இனங்களுக்கிடையிலானபுரிந்துணர்வு,உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவிழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் கடந்தவருடம் மிகவெற்றிகரமாக கிழக்குமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டது. தேசியமொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாட்டுஅமைச்சு மற்றும் கிழக்குமாகாணகல்வி அமைச்சு ஆகியன இதற்கு அணுசரனை வழங்கின. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இதனை அமுல்படுத்தியது. இதன் இரண்டாவது கட்டம் திருகோணமலை,பொலன்னறுவைமற்றும் கண்டி ஆகியமாவட்டங்களில் கடந்தமாதம் நிறைவூபெற்றது. கிழக்கு,மத்திய மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சுமற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியன…

Read More

இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் – ஞானசாரர்!

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள பௌத்த மத உரிமைகளை உறுதி…

Read More

இந்த வெள்ளிக்கிழமையை மியன்மாருக்கான குரலாக பிரகடனப்படுத்துவோம்.

இஸ்ஸதீன் றிழ்வான் இன்வாத பெளத்த பிக்குகளால் பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி மனித உரிமைகள் அமைப்புக்கள் இதுவரை சரியான கண்டனம் ஒன்றையும் வெளிடாத நிலையில் நாம் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள்…

Read More

கிரிக்கட் சுற்றுப்போட்டியை ஆரம்பித்துவைத்த றிப்கான் பதியுதீன்

நேற்று (20) அல்பதாஹ் விளையாட்டு கழகத்தினர் நடத்திய AF கிண்ண மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

Read More

எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் மட்டுமே.. நிலக லங்கார தேரர்

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் –   யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்றப்பட்ட பின்னரும்  எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே. எங்களின் இன்ப துன்பங்களிலும் அவர் பங்கேற்பவர் என ஸ்ரீ பன்வௌ விகாராதிபதி நிலக லங்கார தேரர் தெரிவித்தார். வெலி ஓயா பிரதேசத்தின் பல்வேறு  கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) அமைச்சர் றிஷாட் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டு அந்த பிரதேச மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஸ்ரீ பன்வௌ பகுதியில் இடம்பெற்ற கூட்ட மொன்றில்; உரையாற்றிய…

Read More