Headlines

நுரைச்சோலை வீடுகளில் குடியிருக்கவிடாது தடுத்ததுபோல முசலியிலும் வாழவிடாது தடை போடுகின்றனர்

-சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள் முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற உலமாக்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். புத்தளம் புளிச்சாக்குளம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப்போட்டியில் 20…

Read More

புதிய ஐநா மனித ஆணையாளருடன் கலந்துரையாட இலங்கை தயார்: கெஹெலிய

ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக வந்துள்ள இளவரசர் ஸெய்த் அல் ஹுசைனுடன் இலங்கை விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என புதிய ஆணையாளர் தெரிவித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்தி பற்றி கருத்து கேட்கையில் அமைச்சர் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். ஐநாவின் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதை…

Read More

முப்படைகள் சகிதம் மஹ்ரூப் எம்.பி. களத்தில்.

இன்று கிண்ணியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு எதிரான பாரிய வேலைத்திட்டம் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் டெங்கு ஒழிப்பு நிகழ்வில் 4000 மேட்பட்ட முப்படையினரும் பொலிசாரும் , இவர்களுடன் இணைந்து அரச ஊழியர்கள் , இளைஞர்கள் என பலரும் இந்த பனியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

இலங்கையில் 818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்ந்துங்கள் – கல்வி அமைச்சர்

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது என அவர் கோரியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும். தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்…

Read More

හිටපු අමාත්‍ය මහින්දානන්ද ලබන 27 ජනපති කොමිසම හමුවට

– නිලුපුලී – දුම්රිය දෙපාර්තමේන්තුවට අයත් නාවලපිටිය ප්‍රදේශයේ ඉඩමක් මහින්දානන්ද පදනමට බදුදීම සම්බන්ධයෙන් සිදුකෙරෙන විමර්ශනයකට අදාළව ප්‍රකාශ සටහන් කරගැනීම සඳහා හිටපු අමාත්‍ය මහින්දානන්ද අලුත්ගමගේ මහතාට ලබන 27 වැනිදා බරතළ වංචා සෙවීමේ ජනාධිපති විමර්ශන කොමිසම වෙත  ‍පැමිණෙන ලෙස දැනුම් දී ඇති බව වාර්තා වී තිබේ.

Read More

திருட்டுப்போன ராஜிதவின் கோப்புக்கள்

பேருவளை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு திருட்டுக் கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டிருக்கலாம் எனவும், அவர்கள் 5 கோப்புகள், 5 குறுந்தகடுகள், ஐ.பேட் கணிப்பொறி, மடிகணணி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் ராஜித சேனரத்ன அவ்வப்போது வந்து தங்கிசெல்வதாகவும், இதனை நன்கு அவதானித்த இந்த திருட்டு கும்பல் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்நுளைந்துள்ளதாக…

Read More

தேசிய வீடமைப்புத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன. காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஸ்தாபகர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிறந்த தினத்தை குறிக்கு…

Read More

அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு!

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று மாலை (11) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றாக மறுத்துள்ளதுடன். உயிர்த்த ஞாயிறு…

Read More

விஜித்த ஹேரத்க்கு, 1500 ரூபாய் அபராதம்

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி, நேற்று முன்தினம் இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எதுஎவ்வாறு…

Read More

யெமன் நாட்டை பாதுகாக்க 10 முஸ்லிம் களத்தில் – சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

சவூதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகள் இணைந்து யெமனில் சியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. யெமன் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி அரசுக்கு ஆதரவாகவே பிராந்திய நாடுகள் இத்தாக்குதலை நடத்தி வருகிறது. எனினும் இந்த தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் சவூதி  அரேபியாவை வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் யெமனின் இறைமையை மீறுவதென்றும் இரத்த வெள்ளத்தையே ஏற்படுத்தும் என்றும் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் சாரிப் எச்சரித்துள்ளார். யெமன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு…

Read More

அமைச்சர் அமீர் அலியின் துரித முயற்சியினால் 350 மில்லியன் ரூபாய் செலவில் மட்டு.ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை

முதன்முறையாக மட்டக்களப்பு-ஓட்டாமாவடியில் நான்கு வழிப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கென 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயவாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார். நாலவடிச் சந்தியிலிருந்து தியாவெட்டுவான் பாலம் வiரையான 2 கிலோ மீற்றர் நீளமான பாதை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டு இடையில் மின்விளக்குகள் பொருத்திப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளன.இதற்கென 300 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அத்துடன் 1 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட ஓட்டமாவடி பாலத்திலிருந்து…

Read More