Headlines

அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கு இவ் வருட  கம்பரெலிய திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள பத்து பிரதேச செயலகங்களுக்கான சுமார் 603 வேலைத் திட்டங்களுக்காக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு, கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக கம்பரெலிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப…

Read More

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், இன்று (02) மாவட்ட செயலகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர்  ரிஷாத் 

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை இன்று (16 ) அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்….

Read More

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…

Read More

மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்தது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே  தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை  கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்து காணொளியை வெளியிட்டுள்ளனர். அதில்  காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில்…

Read More

இராணுவ தளபதி அனுதாபம்

சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தனதுஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

விவா­தத்­திற்கு இட­ம­ளி­யோம்

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒன்று அல்ல, நூறு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைகள் கொண்டு வந்­தாலும் எமக்கு பிரச்­சி­னை­யில்லை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது என நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். பிர­தமர் மாத்­தி­ர­மின்றி முழு அர­சாங்­கத்­தையும் வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு புதிய பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்­கு­வதே எமது நோக்­க­மாகும். இந்ந சந்­த­ர்ப்பத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை என்­பது அர்த்­த­மற்ற…

Read More

அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்!

அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும்போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்திள்ளது

Read More

விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தொடர்பாக விசேட நிபுணர்களின் ஆறு அறிக்கைகளைசர்வதேசத்திற்கு வெளிப்படுத்துமாறு கோரி அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கை மூலம் நாட்டின் இராணுவத்தினர் மீது கடும் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாருஸ்மன் அறிக்கை உண்மைக்கு புறம்பான, இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர…

Read More

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (15/01/2020) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அங்கு தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக பேசினார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் கட்சி எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் ஆதரவாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். -ஊடகப்பிரிவு-

Read More

கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்!

Read More

வியட்னாம் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாத்

ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று 18ம் திகதி முதல் 21ந் திகதி வரை இம்மாநாடு இடம்பெறும். குறிப்பாக கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறையை புதிய யுகம் படைக்கும் என்ற தொணிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சர்வதேச…

Read More