Headlines

மட்டக்களப்பில் ஐந்து தினங்களுக்கு மின்வெட்டு

அப்துல்லாஹ் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பில் மின்வெட்டு புதன்கிழமை தொடக்கம் ஐந்து தினங்களுக்கு மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். தினமும் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து வரை இந்த மின்வெட்டு பின்வரும் மின் பாவினையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருக்கும். புதன்கிழமை 09.07.2015– களுவாஞ்சிகுடி மின் பாவினையாளர் சேவை நிலைய அம்பிளாந்துறைப் பகுதி. வியாழக்கிழமை 10.07.2015- களுவாஞ்சிகுடி நகர மின் பாவினையாளர்…

Read More

23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவு!

பதவிக்காலம் முடிவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி  தெரிவித்தார். மேலும்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை குறிப்பிடத்தக்கது.

Read More

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி அதிகம்

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி…

Read More

மின் தடைக்கு, மின்னலே காரணம்

பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…

Read More

மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்….

மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். மன்னார் –தலைமன்னார் பிரதான வீதி அருகில் அமைந்துள்ள கரிசல் கிராம மக்களின் நலன் கருதி இந்த மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழு நாடும் ஒளி பெறுகிறது என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ,வடக்கின் வசந்தம் மின்சார திட்டத்தின் மூலம் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது மன்னார் மாவட்டத்தில்…

Read More

யசூசி அக்காஷியை சந்தித்தார் மஹிந்த!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவுக்கு மனிதநேய விவகாரங்களுக்கான அவசரநிவாரணப் பணியின் உப செயலாளர் நாயகமும், இலங்கை்கான ஜப்பானின் முன்னாள்தூதுவருமான யசூசி அக்காஷி அழைப்புவிடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,ரோஹித்த அபேகுணவர்தன, ஜயந்த சமரவீர, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஷன் ரணசிங்கஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஜூன் 10 ம் திகதி ஜப்பானிற்கு விஜயம்செய்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மனித உரிமை ஆணைக்குழு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார்  தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழு செல்ல இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அது குறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என…

Read More

சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த அரசு

சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது. ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியதையடுத்து அந்த பிரதேச சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதன்பிரகாரம் அந்த பிரதேச சபையில் எதிரணிக்கே பெரும்பான்மை இருக்கிறது.

Read More

உண்மையை காத்த ஒரு பொய்!

Mujeeb Ibrahim– சதி வலையில் எர்தொகான் உயிர் தப்பிய சம்பவம்: அந்த இரவில் அவர் விடுமுறைக்காக தங்கியிருந்த பிரத்தியேக மர்மரிஸ் ரிஸோர்ட் இற்குள் 25 சதிப்படை வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் இறங்கிவிடுகின்றனர். அங்கே அவர்கள் துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டனர். ஆனால் இறைவனின் உதவியால் அவர்கள் அங்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே எர்தொகான் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியிருந்தார்! இருந்தும் ஆபத்து நீங்கிவிடவில்லை, அவர் அங்கிருந்து பயணம் செய்த விமானம் (business Jet) பின்னர் வானில் வைத்து…

Read More

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பஸ் மோதியதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காரின் டிரைவர் காயமடைந்தார். பஸ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த நிறுவனம் அந்த கார் டிரைவருக்கு 90 ஆயிரம் திர்ஹம்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என…

Read More

விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு அறிவுறுத்தல்

வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நாட்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இவ்வருடத்துக்குரிய விண்ணப்பப் படிவங்கள் யாவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விசேட கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அனுமானித்துள்ளதாக…

Read More

இஸ்லாத்தை பற்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

அண்மையில் இஸ்லாத்தை பற்றி உலகில் முன்னணி ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் பேட்டி ஒன்றில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் “சமீபத்தில் நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அங்கு, ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகைக்காக பாங்கு சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் என்னுடைய படுக்கையில் அமர்ந்து நான் யோசித்து கொண்டே இருந்தேன். ஆனால், ஒரு விசயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தன்னை படைத்த இறைவனுக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழும் இவர்கள் உண்மையிலயே சிறந்தவர்கள்.”

Read More