Headlines

பேசாலை பத்திமா ம.வி யின் அதிபர்விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.

கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்….

Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று இரவை பாராளுமனரத்தில் கழிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்….

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தை மீறி செயற்படுவதாக குற்றம் சாட்டியும் முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமனரத்தில் இன்று இரவை கழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை முன் எடுத்து வருகினறனர். குறித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் நாளை விடியும் வரை பாராளுமன்ரத்தில் வீற்றிருந்து தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு தவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு…

Read More

ISIS விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் – ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில் அண்மைக் காலமாக IS பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ISIS என்று முன்னால் அறியப்பட்ட இவ்வியக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது. இப்பிரகடனம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமானது என்று உலக நாடுகளின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் கருதுகின்றன. இவர்களின் தீவிரப் போக்கும், அத்துமீறிய கொடூறக் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு…

Read More

ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் ரிஷாட்.

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2 ஆம், 3 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. இன்று (02) காலை கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர்  அலெக்ஸாண்டர் கார்ச்சேவ் அமைச்சர்…

Read More

பம்மன்ன மக்கள் சந்திப்பும் எதிர்கால அபிவிருத்தி திட்டமிடல் கலந்துரையாடலும்!

கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன, ஹொரவதுன்னகம மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த 07 அன்று  அகில இலங்கை மக்கள் காங்கிஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான் மற்றும் பிரதேச இளைஞர்கள், கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

சுத்தமான குடிநீர் திட்டம்!

மன்னார் மாவட்டத்தின், தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.நயீம் வேலைத்திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். (ஐ)  

Read More

வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை! BREAKING NEWS

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளர்த்து. இதன் படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரையும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்து இருந்த அதேவேளை சற்று முன்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக…

Read More

சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல்

முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவனை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Read More

முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து அரசியலை ஆரம்பித்துள்ளது… அப்துல்லாஹ் மஹ்ருப் குற்றச்சாட்டு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பளார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு, அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம்…

Read More

நவீன் திஸாநாயக்க இராஜினாமா

அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொள்வதாகவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிரணியுடன் நாளை உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இவர் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோசித்தவின் தொலைக்காட்சி நிலையத்தில் பல மணித்தியால சோதனை

ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் (கடற்படை அதிகாரி) யோசித்தவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர். கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் இந்த தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது. இந்தநிலையில் சோதனையின்போது பல கணணிகள், மடிக்கணணி ஒன்று என்பன விசாரணைகளின் நிமித்தம் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கை கடுவெல நீதிமன்ற அனுமதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முற்பகல் 10…

Read More