Headlines

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மருந்து கண்டுபிடிப்பு




பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *