Headlines

தெற்கு ஊடகவியலாளர்களின் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தலைமையிலான தெற்கு ஊடகவியலாளர்கள் நேற்று(27) வடக்கு மாகாண ஆளுனர், மாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்தித்தனர். அத்துடன் இக்குழுவினர் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை மற்றும் ஊடகநிறுவனங்களுக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம் எனும் தொனிப்பொருளில்  வடக்கு தெற்கு ஊடக சகோதரத்துவத்தை ஒன்றாக இணைக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்துக்கு நல்லிணக்க பயணம் ஒன்றினை ஊடகத்துறை அமைச்சர்…

Read More

தனியார் வங்கியில் கொள்ளை : தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ளை நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கைக்குண்டை காட்டி ஊழியர்களை மிரட்டி 8 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் வங்கி ஊழியர் ஒருவரையும் கடத்தி கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதுடன் பின்னர் குறித்த ஊழியர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பாணந்துறையில் சூறாவளி; 30 வீடுகள் சேதம்

பெய்யும் அடைமழை காரணமாக பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளிவாசலில், மலசல கூட புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் (12) ஆராம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில், முன்னாள் குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் இர்பான் மற்றும் அப்துல் கையூம் ஆகியோரின் பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிக்காக, சுமாார் 17,00…

Read More

முஸ்லிம்கள் தொடர்பில் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பதில்

இலங்கை முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார உப செயலாளர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா இதனை தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம் ஒன்றிற்கு பதில் வழங்கும் நோக்கிலேயே…

Read More

இன உறவை சீர்குலைக்க சிலர் முயற்சி -முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச உறுப்பினர்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த பல வருடங்களுக்கு அப்பால் எமது நாட்டில் எற்பட்டுள்ள இன உறவை சீர் குலைக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் எமது தமிழ் பேசும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மன்னார்.வவுனியா.முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ்.செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்.எம்.ஹஸன்.மன்னார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஞானராஜ் சோசை.எம்.சஹாப்தீன்.முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர்.எஸ்.எம்.பைரூஸ்.உறுப்பினர்களான மௌலவி…

Read More

கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதீத அக்கறை செலுத்த வேண்டும்! – அமைச்சர் றிஷாத்

ஆசிரியர் தொழில் புனிதமானது. மகிமையானதும் கூட. இந்தக் கண்ணியமான ஆசிரியர் தொழிலை புனிதமாக மதித்து, மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு, கன்ஸா சர்வதேச பாடசாலையில் அதிபர் அன்வர்தீன் தலைமையில் இன்று காலை (06/10/2016) இடம்பெற்ற, ஆசிரியர் தின விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, ஆசிரியர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் சரிவர மேற்கொள்ள வேண்டும். கற்பித்தலில் தமது பிள்ளைகளைப் போன்று, மாற்றார் பிள்ளைகளையும்…

Read More

பொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்? – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இஸ்லாம் பற்றி பூரண அறிவைப் புரிந்துகொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து, அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டுமென ரிஷாட் எம்.பி தெரிவித்தார். அமைச்சர் உதயகம்மன்பில அண்மையில் பாராளுமன்றத்தில் குர்ஆன் தொடர்பில் கூறிய கருத்துக்கு தெளிவூட்டும் வகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இன்று (20) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,    இந்த அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையைப் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த…

Read More

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படவேண்டுமென்பதில் நாமும் உறுதியாக உள்ளோம்!!!

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,மலையக கட்சி என்பன உறுதுனையாக உள்ளது எங்களுக்குள் எவ்வித பிரிவினையும் கிடையாது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க,அமைச்சர் கபீர் காசிம் நேற்று (24) மூதூரில் கலந்து கொண்டு காபட் வீதி ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read More

இன, மதவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு 02 வருட சிறை -ராஜித சேனாரத்ன

இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும். அவ்வாறு கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என…

Read More

தொடரும்  புத்தளம் அபிவிருத்தி…..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் புத்தளம் நூர் மஸ்ஜித் வீதி மற்றும் வான்வீதி தொடக்கம் மனல்குன்று வரை காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளை எம்.எச்.எம். நவவி  அவர்கள்  பார்வையிட்டார். புத்தளம் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக குவைட் வைத்தியசாலை 1 கிலோ மீட்டர் காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஐ.நா. விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது

 ஐக்கிய நாடுகள் விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது. அதனாலேயே அதனை இலங்கை எதிர்ப்பதுடன் நிராகரித்துள்ளது என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நீதியற்ற செயல். வெளி ஊக்குவிப்புக்களின் அக்கறைக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகான முனைப்புகள் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை ஸ்திரமற்றதாக்கிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள அவர்…

Read More