Headlines

பிள்ளையானின் துவேசப் பேச்சு; பிரச்சினைகளை ஏற்படுத்தி விடாதீர்கள் – அமீர் அலி

– அனா – அன்மைக்காலமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்னைப் பற்றியும் எனது பெயருக்கு களங்கம் வரக்கூடிய வகையிலுமே கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் இது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கனவு கான்பதற்கு அல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (02.05.2015)…

Read More

நியமனம்பெற்ற புதிய அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்க அமைச்சரவை அனுமதி

அதிபர் சேவை தரம் மூன்றுக்கு புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவர்கள் விரைவில் தமக்கான பாடசாலைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த பாடசாலைகளில் தற்போது அதிபர்களாக பதில் கடமையாற்றுபவர்கள் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக கடமையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வியமைச்சில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள 10ஆயிரத்து நூற்று…

Read More

24 மணி நேரத்தில் விபத்­துக்­களில் ஏழு பேர் உயி­ரி­ழப்பு; 26 பேருக்கு காயம்

நாட­ளா­விய ரீதியில் நேற்று நண்­பகல் 12.00 மணி­யுடன் நிறை­வுக்கு வந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களில் 7 பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். தம்­புள்ளை, நாரம்­மல, பன்­னல, ஹுங்­கம, கிரி­உல்ல மற்றும் புளத் சிங்­கள ஆகிய பகு­தி­க­ளி­லேயே இந்த விபத்துச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரிவித்துள்ளது. நேற்று அதி­காலை தம்­புள்ளை பொலிஸ் பிரிவின், தம்­புள்ளை – கெக்­கி­ராவை பிர­தான வீதியின் மிரிஸ்­கோ­ணி­யாவ சந்­தியில் தனியார் பஸ் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் அதில்…

Read More

வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல் இணையத்தில்

உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியலை இணைய மயப்படுத்தும் பணிகளை, சுகாதாராத அமைச்சின் கணினி பிரிவு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமைக்குள் இந்த பெயர்கள் இணைய பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இடையில் இதற்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

Read More

முசலி நவீன நகர திட்டமிடல் அமைச்சர் ரிஷாத் கொழும்பில் முக்கிய பேச்சு

மன்னார் – முசலி பிரதேசத்தை நவீன நகராக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க  நகர அபிவிருத்தி அதிகார சபை இன்று விஷேட குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும்  – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்குமிடையில் இன்று கொழும்பில் இடம் பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தே குறித்த குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தம் காரணமாக மிக மோசமாக  அழிந்து போயிருந்த முசலி…

Read More

புதிய அரசியலமைப்பு :பாராளுமன்றில் விவாதம் ;09 திருத்தங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனையின் கீழ் பிரதமா் பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள் கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது. அதனை அவா் ஏற்றுள்ளாா். பாராளுமன்றத்தின் இவை விவாதிக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரவோ தமது ஆலோசனையை சமா்ப்பிப்பதற்கு கடசிகள் தேவை இல்லை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தனித்தனியாக சமா்ப்பிக்க முடியும். இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா். நேற்று…

Read More

அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுக்கடன் வழங்கிவைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான அசார்தீனின் தலைமையில், அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு, வீட்டுக்கடன் வழங்கி வைக்கப்பட்டது. குருநாகல் மாவட்ட காரியாலத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாக ஒரு குழுவினருக்கு இந்தக் கடன் தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

15 வது வேலைத்திட்டம் கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், சூரங்கள் கற்குழி பிரதேச இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கி அதனை செப்பனிடும்  வேலைத்திட்டம் அப்துல்லா மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 16 வது வேலைத்திட்டம் பைசல் நகர் ஸம் ஸம் வீதி. அத்துடன்,…

Read More

புளத்சிங்கள தொகுதியின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கைது

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதியொன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் துசித குலரத்ன என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவரது மனைவிக்கு போக்குவரத்துப் பொலிசார் அபராதம் விதித்து, தண்டப்பணம் அறவிடுவதற்கான பத்திரமொன்றை வழங்கியிருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துசித குலரத்ன பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது….

Read More

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் ; முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து,உள்ளூர் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆலோசனைகள்.ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,உள்ளூர் அரசியல்வாதிகள் வீணான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். முசலி தேசிய  பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பணம் மற்றும் இல்ல விளையாட்டு போட்டி என்பன நேற்று (09) இடம்பெற்ற போது  பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,  அரசியல் அதிகாரம் என்பது நிலையானது அல்ல. அதிகாரங்கள் இருக்கும் போதுதான் அபிவிருத்திகளையும்…

Read More

மேல் மாகாண சபை உறுப்பினா் பைருஸ் தலைமையில்: பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு

அஹமட் இர்ஸாட் நாட்டிலுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் முறை மாற்றத்தினை அமுல்படுத்துவதற்காகவும் நேற்று திங்கட்கிழமை (27.04.2015) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினைக் காட்டுவதினை தவிர்த்து நாட்டில் அமைதியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியினை நிலை நாட்டும் பொருட்டு சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளை வேண்டி மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினறுமான பைருஸ்  தலைமையில் 5000க்கும் அதிகமான…

Read More

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More