Headlines

முன்பள்ளி மாணவர்களின் ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும் – A.R.M.ஜிப்ரி

முன்பள்ளி பருவ மாணவர்களின் உடல், உள, ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களில் பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் இன்றியமையாதவர்கள் என கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சம்மாந்துறை அல் – அர்ஷத் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்டார் பாலர் பாடசாலையின் ஆண்டிறுதி அறுவடை எனும் தலைப்பிலான பரிசளிப்பு கலைவிழா அதன் அதிபர் எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில்…

Read More

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும்…

Read More

வேன் மோதியதில் சிறுமி பலி- வேனைத் தீயிட்டுக் கொழுத்திய பொதுமக்கள்

செய்திப் பிரிவு நேற்று மாலை சுமார் 6 மணியளவில் குருநாகலில் இருந்து வந்த வேன் மோதி பாடசாலை மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். குருநாகலில் இருந்து வந்த வானுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். இந்தவிபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

Read More

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை?

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.கே. நாராயணன்  தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் குறித்து இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசனும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது….

Read More

வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரி­ய­வசம்

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர். பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாகப் பிர­சாரம் செய்­கி­றார்காள். இதன் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பே செயற்­ப­டு­கி­றது என தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் தெரி­வித்தார். சிவில் அமைப்­பு­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் கலந்து கொண்ட வில்­பத்து விவ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு ரமடா ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில்…

Read More

புற்றுநோய்க்கு எதிராக, போராட விரும்புகிறீர்களா..?

இலங்கையின் மிகப்பெரும் அபாயமாக புற்றுநோய் விளங்குகிறது. பிரதான புற்றுநோய் சிகிச்சையளிப்பு வைத்தியசாலையாக மஹரகம விளங்குகிறது. இந்த வைத்தியசாலைக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கிற போதிலும் அது போதுமானதாக இல்லை. இந்த வைத்தியசாலைக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கதீஜா பௌண்டேசனும், அதன் நிறுவனர் மொஹமட் ஹாஜியும், அதன் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இலங்கையர்களிடையே 252 மில்லியன் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். அந்த நிதியில் நவீன பெட் ஸ்கேன் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இன்னும் பலபல…

Read More

பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மேல் திணிக்க முடியாது

நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மீது சுமத்தாமல் தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் ஐந்த மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதி கட்டடத் தொகுதியையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி….

Read More

ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014: வாக்களிப்பு ஆரம்பம்!

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. 834 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவு பெறும் என்று தேர்தல்கள் அத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்றையதினமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

Read More

மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு சென்று கேட்டறிந்து உரிய தீர்வுக்கு வழிகோலுங்கள்

அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை சரியாக வழங்க வேண்டுமென இன்று (03.07.2017)வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது அமைச்சரும், இணைத்தலைவருமான ரிஷாட்ப தியுதீன் அறிவுறுத்தினார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடிந்து கொண்டார். கூட்டத்திற்கு சமூகமளிக்காத…

Read More

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…

Read More

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி

உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும்…

Read More

பிரிட்டனின் புதிய அமைச்சரவை

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரசா மே, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். நிதியமைச்சராக பிலிப் மேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா? வேண்டாமா? என்று சமீபத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து நேற்று விலகினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை…

Read More