Headlines

நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.!




மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இன்று (18)  அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள மூன்று பல சரக்கு விற்பணை நிலையங்களும், ஒரு மென்பானம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த வர்த்தக நிலையங்களுக்கு போடப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இந்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளார்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் இங்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *