Headlines

அல் – ஜின்னா பள்ளிவாயலுக்கு 10 இலட்சம் நிதி




அபு அலா
அட்டாளைச்சேனை அல் – ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வெவ்வாய்க்கிழமை மாலை (19) பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்வைத்து கலந்துரையதடினார்.
இக்கலந்துரையாடலில் பள்ளிவாயல் செயலாளர் எம்.ஏ.ஜாபிர், உபதலைவர் யூ.எல்.எம்.சஹீட், பொறியியலாளர் எம்.மக்பூப் மற்றும் நிருவாக உறுப்பினர்களும், பள்ளிவாயல் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை 2 ஆம் பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக்குழுவின் வேண்டுகினங்க ரூபா 10 இலட்சம் நிதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *