Headlines

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும்…

Read More

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக வருமானம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.  கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று (03.06.2014) அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடும்போதே தென்கொரிய தூதுவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் உழைப்பு எமது நாட்டுக்கு அதிக வருமானத்தையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பனி பாராட்டுக்குரியது. அதற்காக விசேடமாக…

Read More

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை நீதியை துஷ்பிரேயோகம் செய்யும் செயற்பாடு: ஜீ.எல்.பீரிஸ்

இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைகள் நீதியைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடாகும். அதனால்தான், இலங்கை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு அமைச்சரின் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான சில சம்பவங்கள் எமக்குத் தெரியவந்துள்ளன….

Read More

பதவிகளையும்,பட்டங்களையும் கொடுப்பது அல்லாஹ் என்பதை மறந்து செயற்பட முடியாது – றிஷாத் பதியுதீன்

ஒரு சமூகத்தின் விடுதலைக்காக வருகின்ற சவால்களை எதிர் கொண்டு அந்த சமூகத்தை பாதுகாக்கவே எமக்கு அரசியல் என்கின்ற கவசமே ஒழிய இந்த அரசியலை வைத்து எவரும் தனிப்பட்ட லாபங்களை அடைவதற்கு முயற்சித்தால் அது மக்களினால் தோற்கடிக்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் வவுனியா…

Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வாக்குப்போட வசதி செய்யுங்கள்..!

எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென  வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பு வலிறுத்தியுள்ளது. அத்துடன் அவர்ளின் வாக்குரிமையையும் தொழில் உரிமைகளையும் வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் திகதி சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கிய பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள அவ்வமைப்பு பேரணியின் இறுதி தினமான 27ஆம் திகதி ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரியும்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் புத்தளம் தளவைத்தியசாலைக்கு தாதிமார் நியமனம்!

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்  பதியுதீனின் நேரடி தலையீட்டால் புத்தளம் தளவைத்தியசாலைக்கு 44 தாதிமார் நியமனம் பெற்று வந்துள்ளனர். புத்தளம் இளைஞர் அமைப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கமும் தாதிமார் பற்றாக்குறையை தீர்க்க அயராது பாடுபட்டனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில், எம்.எச்.எம் நவவி எம்.பியின் முயற்சியில், 1000 மில்லியன் ரூபா பெறுமதியான சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்ட வரைபு  தயாரிப்பு இறுதிக்கட்டத்தில்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More

உபயோகித்த தேங்காய் எண்ணெய்யை மீளநிரப்பி விற்பனை  செய்த மொத்தவியாபார நிலையம் சுற்றிவளைப்பு.

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரசபை அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையின் பின்;னர், இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கையை கண்டுபிடித்தனர். பாவித்த தேங்காய் எண்ணெய், நுகர்வோரின் பாவனைக்கு வழங்காமல், வேறு பாவனைக்கே விற்கப்படுவதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்…

Read More

அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அனுதாபம்!!!

புத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.. பன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.கற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவிஇருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது…

Read More

ප්‍රවීණ මාධ්‍යවේදීන් වන ලසන්ත වික්‍රමතුංග හා ප්‍රගීත් එක්නැලිගොඩ පරීක්ෂණ සඳහා උසාවි 2

– නිලුපුලී – ඝාතන පරීක්ෂණවලට අදාළ අස්ථාන ගත වී ඇති ලිපි ලේඛන සෙවීම සඳහා ප්‍රධාන පරීක්ෂණ උසාවි 2 ක් පත් කර ඇති බව  ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව ප්‍රකාශයට පත් කොට ඇත  . මෙම පරීක්ෂණ සිදු කිරීම සඳහා  යුද්ධ හමුදාවේ  පූර්ණ සහයෝගය ලබා දෙන බවද  ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව විසින් නිවේදනයක් නිකුත් කරමින් කියා තිබේ .

Read More

இரத்தினபுரியில் இன்று அதிகாலை மைத்திரிக்கான மேடை மீது துப்பாக்கி சூடு!

பொதுவேட்பாளர் மைத்திரிபாலி சிறிசேனவின் கூட்டம் ஒன்று இன்று காவத்தையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு மேடை அமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இன்று அதிகாலை 1.00 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Read More

வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத்

அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் றிஷாதிற்கு சிங்களத்தில் அவ்வளவு புலமையில்லை.இருந்தாலும் சிங்கள மக்கள் வில்பத்து விடயத்தில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக சிங்கள நிகழ்ச்சிகளில் எவ்வித அச்சமுமின்றி கலந்து கொண்டுள்ளார். முன்னர் ஹிரு தொலைக்காட்சியிலும் இன்று தெரண தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இவர் குறித்த இரு நிகழச்சிகளிலும் மிகத் தெளிவாக தனது வாதங்களை எடுத்து வைத்திருந்தார்.குறித்த பிரச்சினை எழுந்த நாள் தொடக்கம் இன்று வரை…

Read More

மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலையில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Read More