Headlines

துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து புரட்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 35 ஆயிரம் பேரை விசாரணைக்காக அந்த நாட்டு அரசு கைது செய்தது. இதன் காரணமாக துருக்கி சிறைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இட நெருக்கடியை குறைக்க துருக்கி அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நன்னடத்தையுடன் நடந்து…

Read More

டொனால்ட் ட்ரம்பை விரட்ட வேண்டும் – வில் ஸ்மித்

சமீபத்தில் துபைக்கு சென்றிருந்த பிரபல முன்னனி ஹாலிவுட் நகடிர் வில் ஸ்மித் அவர்கள் இஸ்லாம் குறித்தான டொனால்ட் ட்ரம்ஸ் ன் வெறுக்கத்தக்க பேச்சு குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ”அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்கள் குறித்து நான் வெளிப்படையாக சொல்வது மிகவும் அவசியமானது. டொனால்ட் ட்ரம்ஸ் போன்றவர்களின் பேச்சை கேட்பது மிகவும் மன வேதனைக்குரிய விசயம் ஒரு அமெரிக்கனாக இருப்பதால் இதையெல்லாம் கேட்க வேண்டியது தலையெழுத்து. இப்படிப்பட்டவர்களை விரட்டி அடித்து நாட்டை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்” என வில்…

Read More

சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலம்

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன. அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து…

Read More

குவாண்டம் செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா

குவாண்டம் போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்…

Read More

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட யுவதி 18 ஆண்டுக்கு பிறகு மீட்பு

தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர். தாய் மயக்கமாக இருந்தபோது ஒரு பெண், பிறந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றார். அதை தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்தார். இதற்கிடையே கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 18 வயது நிரம்பிய நிலையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவளது முக தோற்றத்தில் இருந்தாள்….

Read More

இஸ்தான்புல் கோர்ட்டுகளில் போலீசார் அதிரடி சோதனை

துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி முயற்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரை அதிபர் எர்டோகன் அரசு தீவிரமாக…

Read More

காஷ்மீர் பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் கடந்த வாரம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தூதர்கள் மாநாடு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்…

Read More

துபாயில் முதன் முறையாக செயற்கை மழைக்காடு-கடற்கரையுடன் ஓட்டல்

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது. எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அதில் மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஓட்டலுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளன. இந்த அதி நவீன ஓட்டல் ரூ. 2300 கோடி செலவில் கட்டப்பட்டு…

Read More

ஹாட்ரிக் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

ரியோ ஒலிம்பிக்கில் எந்த நாடு எத்தனை பதக்கம் வெல்கிறது என்பது ஒரு கணக்கு என்றால். 100மீ பந்தயத்தில் போல்ட் எத்தனை நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வெல்வார் என்பது தான் மற்றோரு கணக்கு. உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? தொடர்ந்து மூன்றாவது முறையால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்ற கேள்விகளோடு களமிறங்கினார் போல்ட். அனைவரும் எதிர்பார்த்த 100 மீட்டர் போட்டி தூரத்தை 9.81 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த…

Read More

காஷ்மீர் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை – பாகிஸ்தான்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வருட சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்காக சமர்பிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வெற்றியடையும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுத்து…

Read More

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது: பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும்…

Read More

ஈரான் அணு விஞ்ஞானி தூக்கில் போட ஹிலாரி கிளிண்டன்தான் காரணம்: டிரம்ப்

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசுவரரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை கடுமையாக தாக்கி வருகிறார். அவரை சாத்தான் என்று வசைபாடினார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்று பட்டம் சூட்டினார். தற்போது ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் தூக்கிலிடப்பட்டதற்கு ஹிலாரி கிளிண்டனே காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர்…

Read More