Headlines

போகிமான் கோ விளை­யாடிக் கொண்டு சென்­றவர் 3 கோடி பணத்தைக் கண்­டெ­டுத்து அதிகா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்­தார்

போகிமான் கோ (Pokemon Go)விளை­யாட்டில் ஈடு­பட்­டுக்­கொண்டு வீதியில் சென்ற நபர் ஒருவர் 2 இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 3 கோடி ரூபா) கண்­டெ­டுத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. நியூ ஜேர்ஸி மாநி­லத்­தி­லுள்ள ஹெக்ஸ்­டவுன் நகரில் போகி­மான்­களை பின் தொடர்ந்து சென்ற ஒருவர், வர்த்­தக நிலை­மொன்­றுக்கு அரு­கி­லி­ருந்து 2000 டொலர்­களை கண்­டெ­டுத்தார். அந் ­நபர் உட­ன­டி­யாக இது தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­த­தாக ஹெக்ஸ்­டவுன் பொலிஸார் தெரி­வித்­தனர். அதை­ய­டுத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை அதி­கா­ரிகள் அங்கு அனுப்­பினர்….

Read More

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார். வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்தது. ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த…

Read More

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

– ஆர்.ராம் – பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று முன்னர் இந்தோனேசிய  தலைநகர் ஜெகர்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரட்பண நிகழ்வில் பிதமர் ரணில் விக்கிரமசிங்க பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றம் அமைச்சர் கபீர் ஹசீம், இராஜங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சுஜீவ சேரசிங்க  ஆகியோர் பங்கேற்றுள்ளனர் அத்துடன் மலேசிய பிரதமர் நஜீப்…

Read More

ஹிலாரி கிளின்டனின் இணையத்துக்கு சைபர் தாக்குதல்!

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. அத்துடன் ஜனநாயக்கட்சியின் பல இணையதளங்களுக்கும் இவ்வாறு சைபர் தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த சைபர் தாக்குதலுக்கு ரஸ்யாவே காரணமாக இருக்கலாம் என அமெரிக்காசந்தேகம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை ரஸ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்: அது எது தெரியுமா?

1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 2012-ம் ஆண்டு தனது 82-வது வயதில் உயிரிழந்தார். அதேபோல், ஜேம்ஸ் இர்வின் என்பவர் அப்போலோ 15 விண்கலத்தில் 1972-ம் ஆண்டு நிலாவுக்கு சென்றார். நிலாவிற்கு சென்று வந்த இரண்டாவது வருடத்தில் இர்வினுக்கு 43 வயது இருக்கையில் முதன் முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் பிறகு அவரது…

Read More

என்னையும் விட ஹிலாரி தகுதி வாய்ந்தவர்: ஒபாமா

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை விட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் ‘‘ஹிலாரி வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர். ஹிலாரி தமது கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை. என்னை விடவும்,…

Read More

துருக்­கியில் 42 ஊட­க­வி­யலாளர்­களை கைது செய்ய உத்­த­ரவு

துருக்கியில் 42 ஊட­க­வி­ய­லாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில்,  துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத ஆரம்­பத்­தில், துருக்கியில் தோல்வியடைந்த இரா­ணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் ஆயிரக்கணக்கான கைது நடந்தன. இத­னி­டையே மக்கள் விரும்­பினால் தூக்கு தண்­ட­னைக்கு ஆதர­வ­ளிப்­ப­தாக துருக்கிய ஜனா­தி­பதி எர்­டோகன் தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றியம்,…

Read More

சோமாலியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

ஒபாமா நிர்வாகத்தை குறை கூறும் அண்ணன் – எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடபோவதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேன்ட் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் ஓட்டுரிமை உள்ளது. ஆனால், வருகிற அதிபர் தேர்தலில் ஒபாமா கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு ஓட்டு போடப் போகிறேன் என மாலிக்…

Read More

நேபாள பிரதமர் ராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. ஒளி இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.ஒளி. இந்நிலையில் கூட்டாட்சி நடைப்பெற்று வந்த அந்த நாட்டில் கே.பி. ஒளிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக நேபாளி காங்கிரஸ் (NC) மற்றும் சி.பி.என்.-மாவோயிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. கே.பி. ஒளி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அவை குற்றம்சாட்டின. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்காது…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை துருக்கி அரசு பொதுமக்கள் துணையுடன் முறியடித்தது. இந்த ராணுவ புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு…

Read More

பர்தாவை நீக்காவிட்டால் வேலை இல்லை!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் தலை முக்காடை நீக்கும் வரை வேலை கிடையாது என நகைக் கடையில் இஸ்லாமிய பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டு குவைத்தில் இருந்து குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு அகதியாக வந்தவர் மோனா அல்பால்தி(25). அவர் நியூசிலாந்தில் அவான்டேல் பகுதியில் வசித்து வருகிறார். டிப்ளமோ படித்துள்ள அவர் நகைக்கடையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முக்காடு இஸ்லாமிய பெண்ணான மோனா தலையில் முக்காடு அணிந்தபடி வேலைக்கான நேர்காணலுக்காக ஆக்லாந்தில் உள்ள ஸ்டூவர்டு டாசன்ஸ் கடைக்கு சென்றுள்ளார்….

Read More