Headlines

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும்: வாக்கெடுப்பில் முடிவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

Read More

வட கொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் வட கொரியாவிற்கு தமது கடுமையான கண்டனத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வட கொரியா இன்று (22) அதிகாலை  பல கிலோ மீற்றர்கள் சென்று தாக்கக்கூடிய இரண்டு சக்திவாய்ந்த ‘முசுடன்” ரக ஏவுகணைகளை வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் பரிசோதித்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒரு ஏவுகனை 150 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்து தோல்வியடைந்தள்ளதாகவும், மற்றொரு ஏவுகணை தொடர்பான தெளிவான தகவல் வெளியாகவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த…

Read More

பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பேட்டரியில் பறக்கும் விமானத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அதற்கு ‘மோஸ்வெல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 14 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விமானத்தின் ‘புரோபெல்லர்’கள் இயங்க…

Read More

ஏழாண்டுகால வனவாசம் நீங்கி மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கும் ஜார்ஜ் புஷ்

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக 2001-2009 ஆண்டுகளுக்கிடையே இருமுறை பதவி வகித்தவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்(69). 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சி தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து, பதவி விலகிய ஜார்ஜ் புஷ், அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் விலகி இருந்தார். வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட்…

Read More

ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா? இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடப்பது சந்தேகம்

28 நாடுகளின் அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. இந்த ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்ற சர்ச்சை அங்கு எழுந்தது. இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தார். இந்த கருத்து வாக்கெடுப்பு வருகிற 23-ந் தேதி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரமும் நடைபெற்று வந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாகூட கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வந்து, ‘ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து…

Read More

டிரம்பை வீழ்த்த ஹிலாரியுடன் கைகோர்க்கும் பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் ஹிலாரிக்கு கடும்போட்டியாக திகழ்ந்து வந்தவர், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னீ சாண்டர்ஸ். இப்போது முதல் முறையாக அவர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார்….

Read More

சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பெண் எம்.பி.யின் கணவருக்கு ஒபாமா ஆறுதல்

ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டுமா – வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்காக அந்நாட்டு மக்களிடம் வரும் 23-ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, இங்கிலாந்தில் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்று…

Read More

சீனாவுடன் பேச்சு நடத்துங்கள் – தலாய் லாமாவிடம் ஒபாமா வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா சந்தித்துப் பேசினார். முன்னதாக ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிகை விடுத்திருந்தது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அதிபர் ஒபாமாவை தலாய் லாமா தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ”திபெத்துக்கு விடுதலை வேண்டும் என்று தாம் கோரவில்லை…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் (European Union – EU) இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, அவ்வொன்றியம் முழுமையாக நீக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இத்தடை நீக்கம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அது குறித்தான உத்தியோகபூர்வ முடிவை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில், இலங்கை ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித்…

Read More

பனாமா லீக்ஸ் வெளியான விவகாரம்: ஐ.டி. ஊழியர் கைது

பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான கோடீசுவரர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இது தொடர்பான சட்ட ஆவணங்களை, பனாமாவை மையமாக கொண்டு செயல்படும் ‘மொசாக் பொன்சேகா’ என்ற சர்வதேச நிறுவனம் பாதுகாத்து வருகிறது. இந்த நிறுவனம் ரகசியமாக வைத்திருந்த ஏராளமான ஆவணங்கள் பனாமா லீக்ஸ் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தான்…

Read More

ஹிலரி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தெரிவாகியுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் உலக நாடுகள் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் தான்…

Read More

50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதம் உலகை சுட்டெரித்த சூரியன்

உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில்…

Read More