Headlines

ஷாகிர் நாயக்கிற்கு எதிராக குதித்துள்ள தஸ்லிமா நஸ்ரின்

வங்காளதேசம் ’பீஸ் டிவி’க்கு தடை விதித்து உள்ளநிலையில், அந்நாட்டில் அமைதி நிலவும் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார். 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. இந்தியா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் இதுதொடர்பான ஆய்வை…

Read More

மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை இங்கிலாந்து நிராகரித்தது

ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துவிட்டது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும், நீடிக்கலாம் என 48 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு…

Read More

ரஷ்யா – துருக்கி சர்ச்சை முடிவிற்கு வந்தது

கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அதிபர் ரசிப் தேய்ப் எர்துவன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ கூறியதற்கு பிறகு, கடந்த வாரம், ரஷ்ய அதிபர்…

Read More

3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (இ.எஸ்.ஓ.) எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டது. இங்கு தினமும் 3…

Read More

சவூதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம்? (வீடியோ)

பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில்தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர்.பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது. தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்துபோனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சிவெளியாகியுள்ளது.  இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லதுஇராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில்வெளியிடபட்டுள்ளது.

Read More

சதாம் ஹூசைன் நல்ல மனிதர் – ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார்.

Read More

பிஸ்டோரியஸுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை

தனது காதலி ரீவா ஸ்டீன்­கெம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னாளி ஒலிம்பிக் தட­கள வீரர் ஆஸ்கார் பிஸ்­டோ­ரி­ய­ஸுக்கு தென் ஆபி­ரிக்கா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் 6 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்­துள்­ளது. தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்னர் தனது குடும்­பத்­தி­னரை ஆரத்­த­ழு­விய 29 வய­தான பிஸ்­டோ­ரியஸ் பின்னர் சிறைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முன்னர் சமூக அக்­க­றைகள், பாதிக்­கப்­பட்ட ஸ்டீன் கேம்ப் குடும்­பத்­தி­ன ரின் மன உளைச்சல், பெருகி வரும் கொலைக் குற்­றங்கள், மற்றும் கொலைக் ­குற்­ற­வா­ளி­க­ளுக்­கான…

Read More

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகி விடும் : ஆன்டிரியா உறுதி

ஐரோப்பிய யூனியனில் இருந்து எதிர்வரும் ஆண்டுக்குள் பிரிட்டன் விலகி விடும் என அந்நாட்டின் பிரதமர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள ஆன்டிரியா லீட்சோம் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக கடந்தமாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே…

Read More

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மீட்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்து அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும்…

Read More

துருக்கியில் தேசிய துக்க தினம் – கோபத்தை மறந்து பேசிய புடின்

முக்கிய விமானநிலையத்தில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தி, நாற்பதுக்கும் அதிகமானோரை கொன்றதை அடுத்து இன்று துருக்கி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கின்றது. இந்த தாக்குதலில் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமும் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் பதின்மூன்று பேர் வெளிநாட்டவராவர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பே இருப்பதாக தாம் நம்புவதாக துருக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள். 2 இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட…

Read More

துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் – ஒபாமா

துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 41 பேர் பலியானர்கள். 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்புக்கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் துருக்கி…

Read More

பயங்கரவாதத்திற்கு எதிராக இணையுங்கள் – துருக்கி

துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார். உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் நேடோ உறுப்பு…

Read More