News
ஐரோப்பாவில் கலக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள.. விரைவில் நீங்குகிறது இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடை
தமது கோரிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும்…
அமைசர் றிஷாத் இன்று காத்தான்குடிக்கு விஜயம்!
பழுலுல்லாஹ் பர்ஹான் நடந்து முடிந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியினையொட்டி அ.இ.ம.காநடாத்தும் மக்கள் சந்திப்பும் ,கலந்துரையாடலும் இன்று (30-01-2015) வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஆ.ம. ஹாஜியார் காணியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி பிரதம இணைப்பாளருமான சிப்லி பாரூக் தெரிவித்தார். இம் மக்கள் சந்திப்பிலும் ,கலந்துரையாடலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வாணிப அலுவல்கள்…
ஜனாதிபதி; வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம் – அமைச்சர் றிஷாத்
இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது மைத்திரி நிர்வாகம் என்பதை அறிமுகப்படுத்தி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம். குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக அதேபோல இந்த நாட்டில் வாழுகின்ற வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது. ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக பல ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனூடாக எதிர்காலத்திலே மைத்திரி ஆட்சியை இந்த நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ்,…
கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000 கொடுப்பனவு
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50 வீதத்தால் குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
GAS சிலிண்டெர் 300 ரூபாவால் குறைப்பு
மைத்ரி – 100 நாள் வேலை திட்டம் சிலிண்டெர் 300 ரூபாவால் குறைப்பு
அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு!
அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றில் தற்போது மினி வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2014ம்…
பால் மா – 400 கிராம் பக்கட் 325 ரூபா வாக குறைப்பு
மைத்ரி – 100 நாள் வேலை திட்டம் பால் மா – 400 கிராம் பக்கட் 325 ரூபா வாக குறைப்பு
மக்களே பொறுத்திருங்கள்: நிதியமைச்சர்!
ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார். இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும். எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும். நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம். வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும். ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும். மக்கள்…
தேர்தலில் எம்மை பலிகொடுத்து பசில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பினால் அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எந்தவகையிலும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சித் தலைமையிடம் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டாரதென்ன கோன் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முக்கிய காரணம் பசில் ராஜபக்ச என்று தெரிவித்துள்ள ஜனக பண்டார, ”தேர்தலில் எம்மை பலிகொடுத்து பசில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கினார்….
ஜனாதிபதிக்கு சவூதியின் புதிய மன்னர் வாழ்த்து
A.J.M. மக்தூம் சவூதி அரபியாவின் புதிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலுஸுஊத்,ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து இலங்கைஜனநாயகசோசலிச குடியரசின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒருதந்தியைஅனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து தந்தியில் தனது சார்பிலும், சவுதி அரேபியா அரசு மற்றும் தனது மக்களின் சார்ப்பிலும் இனிய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள அவர், புதிய ஜனாதிபதியின் முன்னேற்றம்,சுபீட்சம் மற்றும் சந்தோஷத்திற்கும் உடல்நலத்திற்கும்…
