News
சரத் பொன்சேகாவிடம் இருந்து பறித்த பதவி, பட்டம் அனைத்தும் திருப்பியளிப்பு!
சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள், பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல் உள்ளிட்ட பட்டங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த தகவலை உறுதி செய்துள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதுடன் தேர்தல் தோல்வியின்…
அஸாத் சாலிக்கு எதிராக மொஹான் பீரிஸ் முறைப்பாடு!
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலிக்கு எதிராக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிரதம நீதியரசர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, தன்னை நேற்று மாலை அச்சுறுத்தியதாக அவர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டினை நிராகரித்த அஸாத் சாலி, தனது பழைய நண்பரான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னை அவரது வீட்டுக்கு வருமாறு அழைத்மையினாலேயே அங்கு சென்றதாக…
சந்தேகங்களுக்கு மத்தியிலும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு!:மௌனம் களைத்தார் ஃபிடெல் காஸ்ட்ரோ
சமீபத்தில் புதுப்பிக்கப் பட்ட அமெரிக்க கியூப உறவுக்கு ஓய்வு பெற்ற முன்னால் கியூப அதிபரும் மக்களின் அபிலாஷைக்குரிய முக்கிய தலைவருமான ஃபிடெல் காஸ்ட்ரோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆனாலும் காஸ்ட்ரோ இன்னமும் அமெரிக்க அதிகாரிகளைப் பூரணமாக நம்பவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக கியூபாவின் கம்யூனிசக் கட்சி பத்திரிகையான ‘கிரன்மா’ இனது இணையத் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, ‘அமெரிக்காவின் கொள்கைகளை காஸ்ட்ரோ இன்னமும் நம்பவில்லை என்பதுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் இன்னமும் ஒரு…
பஸ் கட்டணங்கள் குறைப்பு! [கட்டண விபரங்கள் இணைப்பு]
பேருந்துக் கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 8 தொடக்கம் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதன்படி குறைந்தளவு கட்டணமாக இருந்த 9 ரூபா 8 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. TM
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சீனா?
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் புதிய அரசுக்கு சீனா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசு மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்த திட்டம் இலங்கைக்கு அவசியமானது, இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையானது என்ற கருத்தை, தமது ஊடகங்களின் மூலம் சீனா பரப்பத் தொடங்கியுள்ளது. சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திச் சேவை, கொழும்பிலுள்ள சிலரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…
தேவையில்லாதவற்றை பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீதிபதி குமாரசாமி
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீட்டு வழக்கு விவாதத்தில் தேவையில்லாதவற்றை பேசி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ் ராவ் தரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது உதவியாளர் ஆனந்த் இன்னும் கொஞ்சம் வாதத்தை எடுத்து வைக்க வேண்டியுள்ளது…
கெசல்கமுவ ஓயாவில் கறுப்பு நிறத்தில் நீர்! மக்கள் விசனம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலிருந்து கழிவு தேயிலை தூளை கெசல்கமுவ ஓயா ஆற்றில் கொட்டுவதாக நீரை பாவிக்கும் மக்கள் குற்றம்சுமத்துகின்றனர். இதனால் கறுப்பு நிறத்தில் நீர் வருவதாகவும் சூழல் மாசடைவதாகவும் நீரை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கத்தார் வாழ் வாகன சாரதிகளுக்கு, ஒரு எச்சரிக்கை..
M.a.g.m Muhassin கத்தார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள். முதற் குற்றமானால்; 500 ரியால் அபதாரம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15 ரியால் விகிதம் அபதாரம் ). 2ம் குற்றமானால், 7 நாள் வாகனம் பறிமுதல் + டிரைவர்களுக்கு 7 நாள் சிறை. 3ம் குற்றமானால்…
சுவனத்தில் சிட்டுக் குருவிக் கூடொன்று கட்டுங்கள்…!
Shameela Yoosuf Ali வெள்ளவத்தை தொடர்மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சப்னாவின் நினைவில்…! கனவுகளுக்குக் கால் முளைக்கும் வயது உனது நடந்ததெல்லாம் கூட கனவாக இருந்து விடக் கூடாதா..? விழுந்து சிதறியது நீயல்ல; எல்லோருடைய உள்ளங்களும் தான். இருபத்திரண்டாவது மாடியிலிருந்து நீயாகத் தான் விழுந்தாயா அல்லது யாராவது தள்ளி விட்டார்களாவென எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உன்னைத் தள்ளி விடும் கொடுமனது எவருக்கும் வாய்த்திருக்கக் கூடாது என்று உள்ளம் உள்ளுக்குள் பிரார்த்திக்கின்றது. காற்று வெளியில் உன் சிணுங்கல்கள், சிரிப்புக்கள்,…
மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு வித்திட்ட 10 பிரபலங்கள்
நஜீப் பின் கபூர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேல்வியடைவதற்குக் காரணமாக இருந்த விடயங்களை மூன்ற தலைப்புக்களில் நாம் இங்கு வரிசைப்படுத்தி இருக்கின்றோம். எமது இந்த மதிப்பீடு தொடர்பாகவும் இந்த வரிசைப்படுத்தல் ஒழுங்கு மீதும் முறன்பாடுகள் சிலருக்கு ஏற்படவும், இல்லை இந்தப் பட்டியலில் இந்த விடயங்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இருக்கலாம். இது எமது பார்வை அவ்வளவுதான். 01. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கு 02. ராஜபக்ஷக்களின் குடும்ப ஆதிக்கம் 03. தூய்மையற்ற நிருவாக முறையும்…
புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்கள் நாடு திரும்பி பணிகளை தொடர்வதற்கான சூழலை உருவாக்குக
-முஸ்லிம் மீடியா போரம் ஊடாக அமைச்சரிடம் கோரிக்கை- பிரௌஸ் முகம்மட் media forum requestகடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் நாடுதிரும்பி நாட்டுக்காக தமது பணிகளை தொடக்கூடிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய ஊடக அமைச்சராக பதவியேற்றுள்ள கயந்த கருணாதிலகவுக்கு முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் அனுப்பி…
ஆடிய ஆட்டம் என்ன?
மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் Aluthgama Beruwala Darganaharஅல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறான். தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை எடுக்கிறான். ஆட்சியை பெற்றவர்கள் அதை சரியாக பயன்படுத்தினால் அவர்களை அல்லாஹ் கண்ணியப் படுத்துகிறான். அதே நேரம் ஆட்சியை பெற்றவர்கள் அனைத்து அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, மக்களை அடக்கியாண்டால் அவர்களின் அக்கிரமங்கள் தலைவிரித்து ஆடும் போது மரத்தை வேரோடு பிடுங்குவதுப் போல அவ்ஆட்சியாளர்களின் அதிகாரங்களை அல்லாஹ் பிடுங்கி, அதே மக்களுக்கு மத்தியில் அநியாயக் காரர்களை அல்லாஹ் இழிவுப்…
