News
ஊழல் செய்தவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? போகப்போக புரியும்
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28)…
சிக்கினார் நாமல் – அதிசொகுசு நடமாடும் படுக்கையறையும் சிக்கியது (படங்கள் இணைப்பு)
நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் படுக்கையறை அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது. அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் உள்ளது. இந்த பஸ்வண்டியினுள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு கறுத்த ஸ்டிக்கரால் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ளன. பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.
பட்ஜெட்டில் 3 மடங்குகளினால் விலைகள் குறையும்: அசாத் சாலி
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28)…
நற்பெயரைக் கெடுக்க சதி வாய்திறந்தார் சங்ககார…
தனது நற்பெயரை கெடுப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கிரிக்கெட் சபைச் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் சதி செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். கிரிக்கெட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாட்ஸுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த வருடம் இடம்பெற்ற சம்பியன் லீக் போட்டித் தொடரின் போது இலங்கையின் கதுரட்ட மெரூன்ஸ் மற்றும் இந்திய ஐ.பி.எல்….
MH370 விமானம் மாயமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு முந்தைய தினம் அறிக்கை!
கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமாகி இருந்தது. காணாமற் போன இவ்விமானத்தின் மர்மம் ஏவியேஷன் வரலாற்றிலேயே மிகவும் புதிர் மிக்கதாகவும் இன்று வரை சிறிய ஒரு தடயமும் கிடைக்காத ஒன்றாகவும் பதியப் பட்டுள்ளது. மேலும் இதைத் தேடும் பணியும் விமானவியல் வரலாற்றில் அதிகளவு பணம் செலவழித்துத் தேடப் பட்ட ஒன்றாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…
அணித் தலைவர் பதவிக்கும் ஆப்பு?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…
எரிவாயு, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு
பல நகரங்களில் எரிவாயு, மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது. இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த இரு பொருள்களையும் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இடைக்கால பட்ஜெட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
புதிய அரசின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணிவரை வரவுசெலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும். . அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10…
யூடியூப் பதிவர்கள் கண்டுபிடித்த வினோத மனித கூச்ச உணர்வு
யூடியூப்பில் ASMR என்ற தலைப்பில் ஓர் கவர்ச்சியான பெண் கமெரா முன் தோன்றி அவர் ஏதோ சில விடயங்களை மிக மெல்லிய தொணியில் முணு முணுப்பது போன்ற ஒரு வீடியோவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதா? அப்படியானல் ASMR என்ற மனிதர்களின் வினோத கூச்ச உணர்வு பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களுக்குள் உங்கள் தனிப்பட்ட புலன்கள் சார்ந்த கிளர்ச்சி மற்றும் அதன் வெளிப்பாடே ASMR (Autonomous Sensory Meridian Response). இதை அனுபவிக்க வேண்டுமாயின் அந்த உணர்வு…
மூன்று அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் மலையகத்தின் மாற்றம் ஆரம்பம்
அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் மு. வேலாயுதம். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற காணியுரிமைஇ வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளபடவிருக்கின்ற 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் முன்வந்துள்ளமை பாராட்டப்படதக்க மகிழ்ச்சிகரமான செயலாகுமென பெருந்தோட்டதுறை இராஜங்க அமைச்சர் க. வேலாயுதம் தெரிவித்தார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பெருந்தோட்டதுறை கம்பனி நிறைவேற்ற அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு…
அம்பாறை மக்களை சந்திக்கிறார் அமைச்சர் றிஷாத்!
ஆசிரிய பீடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அமைச்சு பதவி ஏற்ற பின்னர் தனது முதலாவது அம்பாறை மாவட்ட விஜயத்தினை மேற்கொள்கிறார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீதின் அழைப்பின் பேரில் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களுக்கும் விஜயம் செய்யவுள்ள அமைச்சர் றிஷாத்; சனி மாலை கல்முனை குடி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலிலும் ஞாயிறு மாலை ஆறு…
இலங்கையில் நீண்ட காலத்தின் பின் ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளன: பராக் ஒபாமா
இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் புதிய ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, எனவே, அவற்றைத் தக்கவைக்க இந்தியா போன்ற அயல் நாடுகள் உதவவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா, புதுடில்லியிலுள்ள சிறிகோட்டை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினர். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவமுடியும். நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல அதிகாரம்,…
