News
அமைச்சரவை எண்ணிக்கை குறைக்க தீர்மானம்
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்தியமைக்கும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இம் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட…
பஸ் கட்டணங்கள் குறைப்பு
அனைத்து பேருந்து கட்டணங்களும் இன்று முதல் 8 தொடக்கம் 10 சதவீதம் அளவில் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, மிகக்குறைந்த பேருந்து கட்டணமான 9 ரூபா என்ற தொகை 8 வாக குறைக்கப்படவுள்ளது. 13 ரூபாவான கட்டணம் 12 ரூபாவாகவும், 18 ரூபா முதல் 34 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவாலும், 37 ரூபா முதல் 41 ரூபா வரையான கட்டணங்கள் 3 ரூபாவாலும் புதிய திருத்தத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன.அதேவேளை, 44 ரூபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள்…
ரஷ்ய நூலகத்தில் பெரும் தீ விபத்து: ஒரு மில்லியன் அரிய ஆவணங்கள் சேதம்
ரஷ்யாவின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் சமூக விஞ்ஞானங்களுக்கான அறிவியல் தகவல் நிறுவனத்திற்கு (ஐஎன்ஐஓஎன்) சொந்தமான இந்நூலகம் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 21500 சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த நூலகத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆவணங்கள் உட்பட 10 மில்லியன் ஆவணங்கள் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த…
மொரகஹந்த நீர் விநியோக திட்டத்தில் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம்
மொரகஹகந்த நீர் விநியோகத்திட்டத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக விஷேட விசாரணைக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் அவர்! மொரகஹ வேலைத் திட்டத்தில் கடந்த அரசு காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளது மட்டுமின்றி இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசித்து அவரின் ஆலோசனைக்கமைய பூரண விசாரணைகளை…
அம்பாறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எதிர்கால பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் – அமைச்சர் றிஷாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆட்சி மாற்றமொன்று தேவையென்று மக்கள் கருதிய போது அவர்களின் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களை தூக்கி எறிந்துவிட்டு சமூகத்தின் பாதுகாப்பு கருதி 71 உறுப்பினர்களுடன் வெளிவந்த முதலாவது கட்சி என்ற வகையில்,மைத்திரி அலையின் பிரதான பங்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொண்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கிழக்கு மக்களின் எதிர்கால பாராளுமன்ற பிரதி…
அமைச்சர் றிஷாத் பதியுதீன் மருதமுனைக்கு விஜயம்
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக் கிழமை மருதமுனைக்கு விஜயம் செய்கிறார். கல்முனை வடக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை 04 மணிக்கு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் சிறிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு மருதமுனை மக்கள் அனைவரும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் நிகழ்வின் போது மைகோப் குழுமத்தின் தலைவரும் தொழில் அதிபருமான சித்திக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து…
அமைச்சர் ஹஸன் அலிக்கு நிந்தவூர் மக்கள் வரவேற்பு
அஸ்ரப் ஏ சமத் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கரசின் செயலாளா் எம். ரீ. ஹசன் அலி சுகாதார ராஜாங்க பதிவியேற்றபின் தனது சொந்த ஊரான அம்பாறை மாவட்டத்தின் நிந்தவுருக்கு சென்ற சமயம் அவரை அப்பிரதேச மக்கள் ஊா்வலமாக அழைத்து வரவேற்றனா். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா் பைசால் காசீம், மாகாணசபை உறுப்பினா் ஆரிப் சம்சுதீன், நிந்தவுா் பிரதேச சபைத் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் குழுவினர் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம்
ஊடகப் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு (2015.01.31) விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர்றிஷாத் பதியுதீன் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலைக்குச் செல்வiதையும்,அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துல்ஷான் உட்பட வருகைத்தந்த அதிகாரிகளையும் காணலாம்.
அம்பாறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் தயார் – ஒலுவில் வரவேற்பு விழாவில் றிஷாத் பதியுதீன்
ஊடக பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பினதள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னுரிமையளித்து செயற்படும் என கட்சியின் தேசிய தலைவரும்.கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஒலுவில் அக்கறை பிரதேச மக்கள் இன்று மாலை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிய வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். கடந்த காலங்களில் இப்பிரதேச மக்கள் அரசியல் ரீதியில்…
காத்தான்குடியில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு (Photo)
முகம்மட் பஹாத் தற்போது காத்தான்குடி கடற்கரை ஆ.மா வளவில் சகோதரர் சிப்லி பாருக் அவர்களின் ஏற்பாட்டில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு நேற்றிருவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் குழுவினர் அமர்ந்திருப்பதையும் வருகை தந்த மக்களையும் படங்களில் காணலாம்.
சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்
சட்டக் கல்லூரிக்கான பரீட்சைகள் நடத்தப்படும் போது எதிர்வரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் விரும்பிய மொழியில் பரீட்சை வினாத்தாளுக்கு பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டக்கல்லூரி பரீட்சை மொழி மூலம் தொடர்பில் நீண்ட நாள் சர்ச்சை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. சட்டக்கல்லூரியில் மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்ற போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் தீர்மானம்
இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவிருந்த ஆடம்பர விடுதி மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் குறித்த திட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லையென ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தெரிவித்துள்ளது. பக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசு நேற்று அறிவித்தது. புதிய அரசின் இந்த தீர்மானத்தின் காரணமாக தமது கம்பனி இந்த திட்டத்தை நிறுத்தப்போவதாக கிறவுன்…
