Headlines

ஐரோப்பாவில் கலக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள.. விரைவில் நீங்குகிறது இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடை




தமது கோரிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இத்தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும் சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய சுற்றாடல் ஆணையாளர், கடல்துறை பொறுப்பாளர் மற்றும் மீன்பிடி ஆணையாளர் ஆகியோரையும் மங்கள சமரவீர சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மங்கள சமரவீர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *