News
புதிய தேர்தல் முறைமையை உடனடியாக அமுல்படுத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய
புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்த உடனேயே அந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவது ஜனநாயகமாகாது. புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஒராண்டு காலமேனும் தேவைப்படும். புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து ஆராய்வதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை அமுல்படுத்த எமது திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படும்…
தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை! – மைத்திரி
இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள்…
ஒளிந்திருந்து வாய்ச்சவடால் விடாமல் தேர்தலில் நேருக்கு நேர் மோத வாருங்கள்; ரணில் சவால்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிக்க முயற்சித்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் அவர்களை சுற்றியுள்ள வாய்ச் சவடால் பேசுபவர்களும் ஒவ்வொரு இடமாக ஒளிந்து மறைந்து சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பொதுத் தேர்தலொன்றில் தற்போதைய அரசாங்கத்துடன் நேருக்கு நேர் போட்டிக்கு வருமாறு சவால் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்தச் சவாலை விடுத்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்…
மேலதிகமாக 1000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள உத்தேசம்
அடுத்த வருடம் முதல் மேலதிகமாக ஆயிரம் மாணவர்களை பல்கலைகழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அதற்கமைய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகின்றார். புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலிய ஐஸ் கரீம் உற்பத்திகளை மிதிக்கும் பாலஸ்தீன இளைஞர்கள்
Abusheik Muhammed ரமல்லாவில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய மக்களின் ஐஸ்க்ரீம் உணவுப்பொருட்களை தூக்கி வீசி காலில் மிதித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்..
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய ஏற்பாட்டில் இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு
அஸ்ரப் ஏ சமத் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரங்களை இலவசமாக பகிர்ந்தளித்தனர். இந் நிகழ்வு இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இரா ஜேசப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகையில் நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு 25 பேருக்கு லெப் டொப், மேலும் 10 புகைப்படக்கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் மற்றும் பேக்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன….
சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரலில்
2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம்…
கைப்பையுடன் கண்டெடுத்த பெறுமதியான பொருட்களை உரியவரை தேடி ஒப்படைத்த வண்டித் தொழிலாளி எஸ்.எம்.பரீத்.. இலங்கையில் தான்
தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று செவ்வாய் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. -தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி- தோப்பூர் பொதுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது அவரின் கை பையிலுந்த 7500 ரூபா பணம்,கையடக்க தொலைபேசி1,வங்கியில் அடகு வைத்த இரண்டு அடகு…
மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகள் கைது
மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.
அரிசி இறக்குமதியை முற்றாக தடை – உணவு பாதுகாப்பு அமைச்சு
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை முற்றாக தடைசெய்யவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவைகளும் காணப்படவில்லை என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் அதிகளவிலான பணத்தை செலவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அளவுக்கதிகமாக அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் உள்நாட்டு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நன்மைக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறினார்.
இம்முறை ஏறாவூரில் நான் நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் -அமீர் அலி
ஏ.எச்.ஏ.ஹுஸைன் எதிர்வரும் அரசியல் சூழல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்துக்கும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு அநேக இழப்புக்களை தருகின்ற ஒன்றாக அமையலாம் என்று சமூர்த்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தி கல்வி வலயத்திலுள்ள அமீரலி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுநர் போட்டி, திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ், அவசரமான ஒரு தேர்தல் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றபோது, அது…
அமெரிக்கா சென்றால் மின்சாரக் கதிரையில் அமர வேண்டி ஏற்படலாம் – கோத்தாபய
தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவன்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த…
