News
பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியில் தீ
பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலுள்ள கணனி விற்பணை நிலையத்தில் இன்று காலை பரவிய தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்!:அதிகாரிகள் உறுதி
அமெரிக்காவின் ஆளில்லா விமானமான டிரோன் விமானம் ஒன்றை செவ்வாய்க்கிழமை சிரியாவில் அரச படைகள் சுட்டு வீழ்த்தியதை அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர். இது குறித்துத் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அதிகாரி ஒருவர் அளித்த தகவலில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இன்னமும் எக்கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராய்ட்டர்ஸ் செய்தித் தாபனத்துக்கு இது குறித்து சிரிய இராணுவம்…
பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்: மைத்திரிபால சிறிசேன
அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் தேசிய அரசாங்கம் தொடரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம். உத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசாங்கத்தில் தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக…
தம்புள்ளையில் புதிய பள்ளியை நிர்மாணித்து உங்கள் கரங்களாலே திறந்து வையுங்கள்: ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை
தம்புள்ளை நகர எல்லைக்குள் அரசாங்கம் கையளிக்க முன்வந்துள்ள 40 பேர்ச் காணியில் புதிய பள்ளிவாசலை நிர்மாணித்து அதனை உங்கள் கரங்களாலேயே திறந்து வையுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை மாத்தளை தியபுபுல ஐக்கிய தேசியக் கட்சியும் எம். ஜி.ஆர். அண்ணாதிராவிட முன்னேற்ற கழகமும் இணைந்து விடுத்துள்ளன. மாத்தளை தியபுபுல ஐக்கியத் தேசியக் கட்சி கிளையின் தலைவரும் இலங்கை எம்.ஜி.ஆர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் நாம் இலங்கையர் கட்சியின்…
பின் லேடனை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்த வழக்கறிஞர் சுட்டுக் கொலை
பின் லேடன் இருப்பிடம் குறித்து சி.ஐ.ஏ-வுக்கு காட்டிக் கொடுத்த ஷாகில் அஃப்ரிதியின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சென்று கொண்டிருந்த சமயுல்லா அஃப்ரிதியின் கார் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக டான் செய்தி சேனலில் ஆன்லைன் பதிப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தலிபான் இயக்கத்தின் இருவேறு கிளைகள் பொறுப்பேற்றுள்ளன. கடந்த 2013-ல், தொடர்ந்து வந்த அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலிருந்து தப்பித்து சென்ற சமயுல்லா அஃப்ரிதி சமீபத்தில் நாடு…
பொதுபல சேனாவின் நடவடிக்கையால்தான் மஹிந்த ஆட்சி கவிழ்ந்தது: யோகராஜன்
பொதுபல சேனாவின் நடவடிக்கைகளால்தான் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தோம் என்பது மட்டுமல்ல பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் கவிழ்ந்தது என ஆர். யோகராஜன் எம்.பி. நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜான் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு வழங்க உறுதியளித்து இறுதி நேரத்தில் பல நாடுகள்…
சிங்கப்பூரை நிறுவிய லீ க்வான் கவலைக்கிடம்
சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 91 வய தாகும் லீ, உடல்நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை யடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அமைச்சர் றிஷாத் சந்திப்பு
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுவர் டேவிட் டாலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது. இச் சந்திப்பில் சமகால அரசியல் நகர்வுகள், தேர்தல் முறைமை மாற்றங்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் வர்த்தக கொள்கைகள் போன்றவைகளை அமைச்சர் தூதுவரிடம் விளக்கினார். வர்த்தக மற்றும் முதலீட்டு மாற்றத்துடன், GSP Plus மீளப்பெறுவதற்கான தேவை, மீன் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படல் போன்றவைகளை அமைச்சர் தூதுவரிடம் முன்வைத்தார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்…
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் உடன் அமைச்சர் றிஷாத்
ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் இன்று காலை இலங்கைக்கான புதிய தூதுவர் yi xianliang வரவேற்றதுடன்.சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் கடந்தகாலங்களில் செய்த அபிவிருத்தி உற்கட்டமைப்பு உதவிகள் அனைத்துக்கும் எமது புதிய அரசாங்கம் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன்,தொடர்தும் அபிவிருத்திக்கு ஒத்தழைப்புகளை வழங்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய தூதுவர் நான் உற்பட சீனா அரசாங்கம் ஆகியன புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்து நற்புறவுடன் செயற்பட ஆர்வமாக உள்ளதுடன்,புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைக்கவும் முதலீடு செய்யவும் சீனா…
மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் மிக பெரிய விமானம்
ஸ்டிராடோ லாஞ்ச சிஸ்டம்ஸ் என்ற விண்வெளி போக்குவரத்து நிறுவனம் ஒன்று உலகின் மிக பெரிய விமானத்தை தயாரித்து வருகிறது . “ராக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 385 அடி விங்க்ச்பான் கொண்டுள்ளது. இந்த விமானம் பெரிய பெரிய ராக்கெட்டுகளை சுமந்து சென்று , புவி சுற்றுவட்டப் பாதையில் கொண்டு சேர்க்கிறது. மேலும் மனிதர்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இவ்விமானம் 2016 -ல் சோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளை கொடுத்து 35 நாட்களில் ராட்சத சிக்கனாக மாறும் KFC சிக்கன் – அதிர்ச்சியூட்டும் தகவல்
உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். . இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “அலி”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும். பின்னர் அதனை வெட்டி பார்சல்…
இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: நேதன்யாகு கட்சி வெற்றி
120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தற்போது 99.5 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதில் நேதன்யாகுவின் லிகுட் கட்சி முன்னணியில் உள்ளது. இக்கட்சி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. எனவே,…
