News
தந்தை கூறிய ஐ லவ் யூ வார்த்தையை அவருக்கு திருப்பி கூறிய 7 வார பெண் குழந்தை
லண்டனின் வட மேற்கு பகுதியில் உள்ள கில்பர்னில் வசித்து வரும் அலி சுபி என்கிற 25 வயது இளைஞருக்கு கடந்த 7 வாரங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையும் தெய்வ குழந்தையோ என எண்ண தோன்றுகிறது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வருடத்திற்கு பிறகு தான் பேச ஆரம்பிக்கும் என்பது தெரிந்த கதை தான். ஆனால் சுபியின் குழந்தையோ, ஏழே வாரத்தில் ஐ லவ் யூ எனக் கூறி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாள்…
வாட்ஸ் அப்பில் வாலிபர் அவமதிப்பு: சவுதிஅரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை
‘வாட்ஸ் அப்’பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28…
இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்!
இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது இத்தேர்தலில் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவின் கட்சிக்கும் மத்திய இடது சாரி கூட்டமைப்பு கட்சிக்கும் கடும் போட்டி நிலவுதாகக் கூறப்படுகிறது. மத்திய இடது சாரி கூட்டமைப்பானது பலஸ்தீனம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை மறுசீரமைப்பதாக உறுதியளித்துள்ளது.பிந்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள் நெட்டான்யாஹுவின் கட்சியை விடவும் இடதுசாரி கூட்டமைப்பு 3 முதல் 4 ஆசனங்களை கூடுதலாக பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. தான் நான்காவது தடவையாக வெற்றிபெறும் பட்சத்தில் பலஸ்தீனத்தின் உருவாக்கத்திற்கு அனுமதிக்கப் போவதில்லை…
வாகன விபத்தில் இருவர் பலி
கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரக்கறி ஏற்றி வந்த லொறி ஒன்று வேகத்தைக் கட்டுப்பாடுத்த முடியாமலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விபத்து தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபீஸ் கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்த 3 மூத்த நீதிபதிகளின் பதவி பறிபோனது: ஒருவர் ராஜினாமா
அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து பணி நேரத்தில் இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த 3 மூத்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட் உயர் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில் அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து தங்களது பணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தவாறு இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுலெஸ், குடியுரிமைத்துறை நீதிபதி வாரென் கிராண்ட், மாவட்ட துணை நீதிபதி மற்றும்…
சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணை
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (VK)
மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்த சம்பவம்.. முறைப்பாடு செய்யபட்டது, ஆப்பு தயார்!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, பொலிஸ் தலைமை காரியாலயத்தில் பேராசிரியர் தினேஷ் கே. குணசேகரவினால், நேற்று குற்றவியல் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் நிர்மானப்பணிகளுக்கு 100 சீமெந்து பக்கட்டுக்கள் அமைச்சர் சஜித் வழங்கிவைப்பு
அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்ட வீரக்கெட்டிய யக்கஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘சஸூனட்ட அருன’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளுக்காக 100 சீமெந்து பக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது. இந் நிகழ்வின்போது பள்ளிவாசலின் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் ;கலந்து கொண்டார்.
Lanka calls its R&D to push for Mod-Trad food
In an effort to overcome issues posed by rising fast food lifestyle to its consumers, Sri Lanka called its R&D players in food sector to focus on more and more Mod-Trad innovations-and the Lankan customers consume almost 7000 tonnes of food items annually, as announced on 16 March.Minister of Industry & Commerce of Sri Lanka…
துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு அழைப்பாணை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பிரதிவாதிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிக்கா டி லிவேரா தென்னக்கோன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவை சுட்டுக்கொலை செய்தமை உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கெதிராக சட்ட மா அதிபர்…
சிரியாவில் மீண்டும் இராசயன ஆயுதப் பிரயோகம்: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்!
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரச படைகளால் மறுபடி இரசாயன ஆயுதம் அதாவது நச்சு வாயுப் பிரயோகம் செய்யப் பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சிரிய உள்நாட்டுப் போரைக் கண்காணித்து வரும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. எனினும், இத்தகவலை முற்றாக மறுத்துள்ள சிரிய இராணுவத் தரப்பு இட்லிப் மாகாணத்திலுள்ள…
சுவிட்ஸர்லாந்து- இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற்தடவையாகும். டிடீயர் புர்கால்ட்டர் கடந்த ஆண்டு சுவீட்ஸர்லாந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
