News
பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா
ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தை கூரோ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கலாநிதி ஜஹர்ஜான் மன்சூர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் கௌரவ அதிதிகளாக வீ கெயா கியுமனிற்றி தலைவர் பிரின்சஸ் மரியா அமொர், ஹமீட் அல்-ஹூஸைனியா கல்லூரி அதிபர் ரி.எம். நசுமுதீன், முன்னாள் கல்விப் பகுதி பணிப்பாளர் சறூக்கான், பாடசாலையின்…
நாவலயில் மனித கை மீட்பு
நாவல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கையொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தெமட்டகொட பகுதியில் உள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கால்கள் இரண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தெமட்டகொடையில் மீட்கப்பட்ட கால்கள் யாருடையது? : தகவல்களை மறைக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல்
தெமட்டகொடை – சிறிதம்ம மாவத்தையில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனிதக் கால்கள் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸாரினால் விரிவு படுத்தப்பட்டுள்ளன. அந்த கால்கள் காணப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல்களை மறைக்கும் குற்றச்சாட்டுக்காக அவரை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. கடந்த சனிக்கிழமை தெமட்டகொடை –…
எம் மனதில் ஒருகாலமும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை இருந்ததில்லை
தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோநிலை இருந்ததில்லை, என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சிங்கள பௌத்த கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்…
கோத்தபாய சுப்பர் மேன் இல்லை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மட்டுமே ‘சுப்பர் மான்’ என்றில்லை என்பதை நாம் நிரூபித்துள்ளோம் என தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தனது அமைச்சில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலக குடிநீர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள தேசிய நிகழ்வு குறித்த ஊடகவியலாளர் மாநாடு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது….
சிவனொளிபாத மலை ஏறி மரணமடைந்த சிங்கபூர்காரர்
சிவனொளிபாத மலையில் ஏறிய, 55 வயதான சிங்கபூர் பிரஜையொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிங்கபூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாதமலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறியபோதே இந்திகட்டுபான பகுதியில் வைத்தே அவர் மரணடைந்துள்ளார். இதுதொடர்பில் சிங்கபூர் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேட்டோ வீரர்களின் பயிற்சிக்குப் பதிலடியாக ரஷ்ய வடக்குக் கடற்படை முழு எச்சரிக்கையில்!
சமீபத்தில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எல்லையில் தொடர் இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது வடக்கு கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறும் ஆர்டிக் வலயத்தில் பயிற்சியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சியானது வழக்கமான பயிற்சியே என்றும் இதற்கும் சர்வதேசத்தின் சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ரஷ்யத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஸ்புட்னிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யக் கப்பற்…
முஸ்லிம் கலை, இலக்கியங்களை ஆய்வு செய்ய முற்படுபவர்களுக்கு..!
– கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ் – கலைஞர்கள், படைப்பாளிகள், அறிஞர்கள், தத்துவவியலாளர்கள் எனப் போற்றப்படும் மேதைகள் காலத்தால் அழியாதவர்கள். அவர்களது படைப்புக்கள் என்றும் நிலைத்து வாழ்பவை. அதனிலும் சிறப்பு யாதெனில் அவர்களது சிந்தனைக் கருத்துக்கள் உலகம் உள்ளவரை நிலையா தர்மமாகப் பிரகாசித்து பலருக்கு அறிவொளியூட்டிவருவதாகும். அந்த அடிப்படையில் சுமார் 200 வருடங்களுக்குற்பட்ட காலத்தில் தற்போதைய நிலை போன்று ஊடகங்கள் இருக்க வில்லை. அச்சு ஊடகங்கள் கூட மிக அரிதான காலம். அப்படியான ஒரு காலக்கட்டத்தில் அறிஞர் சித்திலெவ்வை என்றும்,…
மலேசியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி வெடித்து சிதறியது
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து…
அத்துமீறும் எவரையும் சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமை உள்ளது: மீண்டும் பிரதமர் திட்டவட்டம்
இலங்கைக் கடலில் அத்துமீறும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது என அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு (NDTV) அவர் அளித்த பேட்டியில், “இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது. இதில் ஒன்றும் புதிது இல்லை” என்று கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி இலங்கைப் பயணம்…
ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு
– அனா – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு (16.05.2015) கல்லூரி பிரதன மண்டபத்தில் இடம் பெற்றது. 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
ஏறாவூர் முஹம்மத் இர்சான் (21வயது) கொழும்பில் வபாத்
ஏறாவூர் ஐ சேர்ந்த மாட்டு வியாபாரி ஜிப்ரி மற்றும் நகர சபையில் கடமை புரியும் ஹைருன் நிஷா தம்பதிகளின் புதல்வன் முஹம்மத் இர்சான் (21வயது) இன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமாகி விட்டார் – இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன் – தொழில் நிமித்தம் கொழும்பு சென்று இருந்த இவர் இன்று ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலை க்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு உயிர் இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -தகவல்: முகம்மத் அஸ்மி -mn
