News
349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவு…ஜனாதிபதி அதிரடி
நாடு பூராவும் உள்ள 349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் மத ஸ்தானங்கள் போன்றவற்றுக்கு ஐநூறு மீட்டர் தூரத்துக்கு உற்பட எல்லைக்குள் இருக்கும் அனைத்து மதுபான சாலைகளையும் நாளை அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யும் படி போதை தடுப்பு பிரிவிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் உரையாடி உரிய நடவடிக்கை எடுப்பேன்- உள்ளக போக்குவரத்து அமைச்சர்
உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரன்ஜித் மத்துப பண்டார அண்மையில் மன்னார் டிப்போவுக்கு விஜயம் செய்தார்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இங்கு வருகைத்தந்த அமைச்சர் தற்போதைய டிப்போவின் நிலைக் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்து கொண்டார். நீண்ட துார மற்றும் குறுந்துார போக்குவரத்து சேவைகள் தொடர்பில் மக்களுக்கு இலக சேவை வழங்குவதன் அவசியம் குறித்து போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளிடத்தில் எடுத்துரைத்தார்.’ மன்னார் டிப்போவின் செயற்பாடுகளை விஸ்தரிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது தொடர்பில் சாலை முகாமையாளர்…
கிழக்கு மாகாண சபை மீண்டும் 31ம் திகதி கூடவுள்ளது
அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கூடப்பட்டது . இவ்வமர்வின் போது சபையில் ஏக மனதாக மாகாண சபை உறுப்பினர் ஜமீல்அவரினால் முன்மொழியப்பட்ட பிரதி தவிசாளர் பதவிக்கு இரா துரைரத்தினம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் சபை தலைவர் தேர்வும் இடம் பெற்றது . இதனை மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி முன்மொழிய சுகாதார அமைச்சர் மன்சூரால் ஆமோத்திக்கப்பட்டு சந்திர தாச கலபதி சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்….
முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் நிதி மோசடி தொடர்பில் விசாரணை
பாரியளவில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமையால் 13 பேர் பாதிப்பு
பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் 13 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமையால் 13 பேர் பாதிப்பு
பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் 13 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்குமாறு புத்ததாஸ கோரிக்கை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டுக் கொள்வதாக கடுவல மாநகர மேயர் ஏ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் சசீ வீரவன்சவிற்கு ஆதரவு அளித்த விமல் வீரவன்ச மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று வெளியில் வந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45/E சரத்தின்டி போலி…
தாமரைக் கோபுரத் திட்டம் தொடர்பில் சர்ச்சை
கடந்த அரசாங்கத்தின் தாமரைக் கோபுரத் திட்டம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இலங்கை போன்றதொரு நாட்டில் தாமரைக் கோபுரம் போன்றதொரு பாரியளவு திட்டமொன்று அவசியமற்றது என துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்புத் துறைமுகத் திட்டத்தை பார்வையிடச் சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த தாமரைக் கோபுரத் திட்டம் குறித்து ஜனாதிபதியிடம் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பெஹலியகொடவில் அமைக்கப்படவிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் குறித்த கோபுரத்தை துறைமுக…
நரேந்திர மோடிக்கு நன்றி
-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்து தலைமன்னார் கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் உறவு தொடர்பில் புதிதாக எவரும் கூறவேண்டிய தேவையில்லை.இது நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னிப் பிணைந்ததொன்று என்பதை இங்கு கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். இலங்கையின்அரசியல்…
போலியோ தடுப்புக்கு புதிய முறை
போலியோ நோயை தடுப்பதற்காக தற்போது குழந்தைகளுக்கு வாய் மூலம் வழங்கப்படும் மருந்துக்கு பதிலாக, ஊசி மருந்து ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் பொது சுகாதார விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் போலியோ தடுப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊசி மருந்து மூலம் போலியோ தடுப்பை வழங்கும் முறைமை எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கைக்கு அவமானம்: முழு நாடும் எதிர்ப்பு!
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்ற மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை எதிர்ப்பதில் இலங்கை ஐக்கியப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமது நாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணை நடத்துவதை இலங்கை மக்களும் அரசியல் வாதிகளும் ´அவமானமாக´ கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டுபாயில் நடைபெற்று வரும் கல்வி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ´IBTimes UK´ என்ற ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட…
மஹிந்தவின் பூஜையில் முன்னாள் அமைச்சர்கள்
கண்டி மேல் நாட்டு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு புண்ணியம் வேண்டி கதிர்காமம் கிரிவேஹர விகாரையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன. இதனையடுத்து போதி மரத்திற்கு அருகில் போதி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாளவ மேதானந்த தேரர், முன்னாள் அமைச்சர்கள், விமல் வீரவன்ஸ, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம, உதய…
