News
திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து! வீடியோ இணைப்பு!
ஜப்பானில் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர். ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபர்களுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும். மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வதற்காக அந்த இடத்தில் வைக்கப்படுவது இல்லை….
தில்லையடி சிறுமி காமுகனால் கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுமி புத்தளம்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் பரவுகிறது…
முஹம்மட் றின்ஸாத் சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இந்த கண் நேய் கடும் உஸ்னத்தால் ஏற்படாலாம் என சத்தேகிக்கப் படுகிரது. எனவே மக்கள் அனைவரும் அதிக உஸ்னத்தில் வெளியில் நடமாடுவதை தவித்துக் கொண்டு இந்த நோயில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ளுங்கள். இந்த நோயினால்…
குவைத் அரசு தொழிலாளர் நலன் கருதி புது சட்டம் !
மரைக்காயர் – குவைத் குவைத் அரசு இன்று முதல் (ஜுன் முதல் தேதியில் இருந்து ) ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது மீறி வேலை பார்க்க அழைத்து செல்லும் நிறுவனத்திற்கோ அல்லது வேலை பார்க்கும் தொழிலாளருக்கு தலா 100 தினார் அபதாரம் விதிக்கப்படும் என குவைத் அரசு கூறி…
15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டம் – றிஷாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதற்கான திட்டமொன்றினை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முதல் கட்டமாக 15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டமொன்றினை நடை முறைப்படுத்தவுள்ளதாக கூறினார். புத்தளம் தில்லையடி உமராபாத் அன்சார் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இன்று (2015.06.01) இடம் பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமை பரிசில்…
குடும்பத்தை சிதைக்கும் ‘வாட்ஸ் அப்’ பெண்கள்!ஒரு அதிர்ச்சி தகவல்!
– விஜயலட்சுமி பந்தையன் – “எப்போதும் சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவது என் மனைவியின் இயல்பு. ஆனால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதாவது பேசினாலும் எரிந்து விழுகிறாள்… கத்துகிறாள். நான் வீட்டிற்குள் இருக்கும்போதுகூட பெரும்பாலான நேரத்தை அறைக்குள் தனிமையிலே கழித்துக்கொண்டிருக்கிறாள்’’ என்று மனைவி மீது குறைபட்டார், கணவர். இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அவருக்கு வயது 40. அவளுக்கு 35 வயது. பத்து வயது மகள் இருக்கிறாள். உற்சாகமாக செயல்பட்டு உலகை புரிந்துகொள்ளவேண்டிய…
சவுதி அரேபியாவில் பணியாற்றும் 192 வெளிநாட்டவர் தங்களை இனிய மார்க்கமாம் இஸ்லத்தில் இணைத்து கொண்டனர்!
மௌலவி செய்யது அலி ஃபைஜி சவுதி அரேபியாவில் செயல் பட்டு வரும் பல .இஸ்லாமிய அழைப்பு மையங்களில் குறிப்பிட்ட ஒரு அழைப்பு மயத்தின் முயர்ச்சியினால் கடந்த ரஜப் மாதத்தில் மட்டும் 192 மாற்று மதத்தோர் தங்களை இனிய மார்கமாம் இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் இவர்களில் .இந்தியாவை சார்ந்தவர்கள் பிலிப்பைன்லை சார்ந்தவர்கள் உட்பட பல நாட்டவர்களும் உள்ளனர் அந்த இனிய காட்சியை தான் படம் விளக்குகிறது இனிய மார்கத்தில் இணைந்த அனைவர்களும் இருஉலகிலும் வெற்றி பெற இறைவனிடம் கையேந்துவோம்.
சவூதியில் வேலை செய்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
கடந்த வெள்ளி ஜும்மா நாளன்று தமாமில் உள்ள ஒரு மஸ்ஜிதில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் படுகாயமடைந்தனர். நாட்டையே உழுக்கிய இந்த கோர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த செய்திகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் புகைப்படங்களுடனும், வீடியோகளுடனும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த செய்திகளை அங்கு பணிபுரியும் நம்மவர்களும் அதிகம் பகிர்ந்திருந்தனர். சவூதியில் அங்குள்ளவர்கள் சமுக வலைதளங்களில் என்னென்ன செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்கானிக்கப்படுகிறது….
புனித கஃபாவை கழுவி, தூய்மைப்படுத்திய சவுதி மன்னர்..
ஆதம் நபியால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இறைவனுக்கான முதல் வணக்கஸ்தலம் என்றும் நம்பப்படும் மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் வழக்கப்படி சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இன்று கழுவி, தூய்மைப்படுத்தினார். பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயிப் உடன் கஃபாவுக்கு வருகைதந்த மன்னரை மக்கா நகர கவர்னர் வரவேற்றார். மக்கா நகரில் நிறைவேற்றப்படவுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மன்னர், இந்த…
நடுவானில் அவமானப்படுத்தப்பட்ட தாஹிரா. பேஸ்புக் தகவலால் மன்னிப்பு கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்
தாஹிரா அஹ்மத் என்ற முஸ்லிம் பெண்மணி நேற்று முன்தினம் (29-05-2015) அமெரிக்க விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்த போது தாஹிராவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, இதனால் பணிப்பெண்ணிடம் சோடா கேட்டுள்ளார். அப்போது அவருக்கு (மூடி திறக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட) சோடாவில் கேஸ் இல்லையென்பதால், மூடி சீலிடப்பட்ட சோடா வழங்குமாறு கேட்ட தாஹிராவுக்கு அவ்வாறு சீலிடப்பட்ட எந்த பானங்களும் வழங்கமுடியாது என்று பணிப்பெண் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில், அருகிலிருந்த ஒரு பயணிக்கு சீலிடப்பட்ட பீர்…
அம்பாறை மாவட்டத்தில் வீடுகளற்ற 1900 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்
அஸ்ரப் ஏ சமத் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூவினங்களையும் சார்ந்த மக்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் ‘திரிசவிய’ 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் வீடமைப்புக் கடன்களும் வீட்டுரிமைப்பபத்திரங்கள் அமைச்சர் சஜித்தினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு அம்பாறையில் உள்ள தயா அப்ரல் கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாணசபையின் உறுப்பிணர் தயா கமகே தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச…
அமைச்சர் றிஷாதை தீவிரவாதி போல் சித்திரிக்க முயற்சிக்கும் சிங்கள ஊடகம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் பொரளை பள்ளிவாசலின் கண்ணாடிகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான செய்தியை லங்கா சீ நியூஸ் என்ற விமல் வீரவன்ச சார்பு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்தச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஒரு தீரவாதியாக காட்ட முயற்சித்துள்ளமையை என்னால் உணரக் கூடியதாக உள்ளது. பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் அசாத் சாலி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் அங்கு சென்றார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு தேவையான உதவிகளை (ஆலோசனைகளை) அவர்கள் வழங்கினார்கள் என்று எழுதப்பட்டிருந்தது,…
