News
ரோஹிங்க்யா மக்களுக்கு ஒற்றுமையாக போராடும் பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அமைப்புக்கள் !
Abusheik Muhammed பிலிப்பைன்ஸ் நாட்டில் பங்க்சா தலைவர் ஆலன் பலன்கி என்பவர் மியான்மர் அரசை வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் 1.3 மில்லியன் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி மியன்மார் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் நோபல் பரிசு பெற்ற ஆங் சூ கி அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார் . பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்த விராது 969 அமைப்பின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் , மியான்மார் அரசாங்கம் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் விடயத்தில் நேர்மையாக…
ரோகிங்கியா முஸ்லிம்களை நடுக்கடலில், கைதுசெய்த மியான்மர் கடற்படை!
மியான்மரில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்ல முயன்றவர்களை நடுக்கடலில் மடக்கிக் கைது செய்துள்ளது மியான்மர் அரசு. மேலும் கடலில் அரசுக்கு தெரியாமல் ரகசியமாக கடலில் பயணிப்பவர்களை அந்நாட்டு கப்பல் படை தேடுவதால் பதற்றம் நிலவுகிறது. மியான்மர் நாட்டில், அரசுக்கும் அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மியான்மரில் இருந்து ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு கடல் வழியாக குடிபெயர்ந்து செல்வதாகச் செய்திகள் வெளியாகி…
பிரிட்டன் – இலங்கை முஸ்லிம்களின் போராட்டத்திற்கு, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஆதரவு
பிரிட்டனர் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளவுள்ள போரட்டத்திற்கு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் பல விடயங்களை சாதிக்கமுடியும். இலங்கை முஸ்லிம்கள் பௌத்தசிங்கள இனவாதிகளின்…
காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா
புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர் றஹ்மா’ பள்ளிவாசல்இன்று (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்போது பிரதம அதிதியாக துருக்கி பின் ஜாபிர்அல் கிதாமி அல் உதைமி அவர்களும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்சூரி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதுடன் உள்ளுர் உலமாக்கள், பிரமுகர்களும் கலந்து…
கொழும்பு – பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)
கொழும்பு – பொறள்ளயில் அமைந்துள்ள ஜாமியுல் அல்பார் பள்ளிவாசல் மீது இன்று இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், பள்ளிவாசலின் நிலைமைகளை பார்வையிட அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தளம்பல் அரசியல் தொடர்ந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக் குறியாகுமா………..?
இஸ்ஸதீன் றிழ்வான் இனவாதமும் சர்வதிகாரமும் குடும்பவாதமும் இணைந்த இலங்கை அரசியல் மைத்திரி என்ற மாந்திரத்தால்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் சாத்வீகமும் கொண்ட ஒரு ஆரம்பத்தை எதிர்பார்த்தோம்,எதிர்பார்க்கின்றோம். சிறிய பெரிய கட்சிகளின் கோர்ப்பாய் இன்றைய அரசாங்கள் நகர்கிறது, முடிவுகள் எடுப்பதில் பாரியசர்ச்சைகளும் சுமைகளும் சேர்ந்தே சுழலுகிறது. கூட்டிணைந்திருக்கின்ற கட்சிகளையும் பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்தவேண்டி இருப்பதால்தீர்மானங்களை எடுப்பதில் பாரிய சவாலைஇந்த அரசு முகங்கொடுக்கின்றது. இதற்கு நல்ல உதாரணமாக மரிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் அமைந்திருக்கின்றது. மரிச்சிக்கட்டியில் முறையற்ற எந்த குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை ஆளும்…
மிஸ்வாக் ( பற்சுத்தம் ) செய்யும் குச்சியை தம்முடன் எப்போதும் வைத்திருக்கும் சவூதி மன்னர் சல்மான்
பதவி ஏற்று சிலமாதங்களில் தன்னுடை இறையச்சத்தாலும், மனிதநேயத்தாலும் உலக முஸ்லிம்களின் மனங்களில் மடடு மல்லாமல் மாற்றுமத மனிதர்களின் மனங்களிலும் ஒரு இடத்தை பிடித்துள்ள , அடுத்து என்ன செய்ய உள்ளார் என்று உலக நாடுகள் உற்றுகவத்திக்கொண்டுள்ள சவூதி சாம்ராஜ்ஜிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுன்னத்தை ( நபி வழியை ) பின்பற்றுபவர் என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கவும் அதிலே அவர் சதாவும் தம்முடன் மிஸ்வாக் ( பற்சுத்தம்…
இறைவன் தந்த வளமான பொருளாதாரத்தை மேம்பாட்டிற்காக செலவு செய்வதும் அவசியமாகும்! சவூதி மன்னர் சல்மான்!
சில தினங்களுக்கு முன்பு சவுதியின் ஜித்தா மாநகரில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் முக்கிய அமீகளுக்கு மத்தியில் சவுதி மன்னர் சல்மான் உரையாற்றும் போது குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அவரின் மார்க்க பற்றை பரை சாற்றுவதாக அமைந்தது என் இனிய சகோதரர்களே நாம் புனித தலங்களை சுமந்த ஒரு நாட்டின் நிர்வாக பொறுப்பில் இருக்கிறறோம் நீங்கள் ஒவ.வொருவரும் உங்கள் கடமைகளை உணர்ந்து சரியாக பணியாற்றியாக வேண்டும் நமது நாட்டை சுற்றி சில நாடுகளிலும் உலக நாடுகளிலும் பல்வேறு சவால்களை…
மலேசிய வனப்பகுதியிலிருந்து 139 ரோஹிஞ்சா அகதிகளின் உடல்கள் மீட்பு
மலேசியாவில் இதுவரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர். ஆட்கடத்தல் கும்பல் மூலம் அழைத்துச் செல்லப்படும் இம்மக்கள், மலேசியாவின் அடர்ந்த வனப்பகுதியொன்றில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நகருக்குள் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யப்படுகின்றனர். மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் வனப்பகுதியில் அவ்வாறான சுமார் 28 முகாம்கள் இருந்துள்ளன. அம்முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள்…
அமெரிக்காவில் வாழும், இலங்கை முஸ்லிம் சிறுவனின் சாதனை!
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே, ஆங்கிலம், அரபு, இத்தாலி ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார். 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் நிஷாதீன் உலகம் முழுவதும் சென்ற பயணங்களின் போது தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது அவர் பொஸ்னிய மொழியை பயின்று வருகிறார். உலகில் உள்ள அனைத்து…
மூடி மறைக்கப்பட்ட பைல்கள் மீண்டும் திறக்கப்படும் – ஜனாதிபதி மைத்திரி
நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மூடி மறைக்கப்பட்டுள்ள ‘பைல்கள்’ மீள திறக்கப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சட்டத்தரணிகள் சங்க நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி நல்லாட்சிக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீண்ட தூர பயணத்தில் சகல தரப்பினதும் ஒத்துழைப்பு கிட்டும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும்தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி: இலங்கை…
இந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு அலங்கரிக்க விரும்பவில்லை -கபீர் ஹாசீம்
அஸ்ரப் ஏ சமத் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்லவே நாம் ;விரும்புகின்றோம். 100 நாட்கள் முடிந்து தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன. இன்னும் காலம் தாழ்த்துவதை ஜ.தே.கட்சி ஒருபோதும் விரும்பவில்லை. அடுத்த பாராளும்னறத் தேர்தலில் நாம் கட்டாயம் வெற்றி பெற்று பெரும்பான்;மை ஆசனத்தினை பெற்று ஆட்சியில் அமர்வோம் அதில் மீண்டும் பிரதமராக ரணில் பதவி வகிப்பார். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும். என ஜ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். நேற்று பி;.பகல்…
