Headlines

இலங்கையில் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு

இலங்கையில் எந்தக் காரணத்திற்காகவும் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை பலமுறை தெளிவாக தெரிவித்துள்ளது, இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை,என  ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து சிந்தித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிங்கப்பூருக்கு அழைப்பு வந்தது: ஆனால் செல்லமாட்டேன் : கோத்தா

நான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல மாட்டேன் என்பதை உறுதிப்பட தெரிவித்து கொள்கின்றேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பிதல் வந்தமை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பலர் கவலை தெரிவித்து எனக்கு செய்திகளை அனுப்பி இருந்தார்கள். நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நான் மதிக்கின்றேன்….

Read More

தேஸ்ரன் கல்லூரி நீச்சல் தடாகத்திலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் பழைய மாணவரொருவரின் சடலமாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கண் தொற்று நோய் தீவிரம் பொதுமக்கள் அவதானம்

ஜுனைட் . எம். பஹ்த் நாட்டின் பலபிரதேசங்களில் புதிய கண் நோயொன்று தற்போது பரவி வருவதாக காத்தான் குடி சுகாதார வைத்திய அதிகாரி  U.L.M.நஸ்ருத்தீன்  பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . “வைரல் கண் ஜக்டிவைடிஸ்” என இந்நோய் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த நோய்குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இது ஒருவகை வைரஸ் இனால் ஏற்படுகின்றன கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல் என்பன இந்நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றது. இந்த அடையாளங்கள் கண்ணிலாவது காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது அருகிலுள்ள அரச…

Read More

சஜின் வாஸ் மீண்டும் 17ம் திகதிவரை விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

புகைப்பிடித்து பாதிக்கப்பட்டோருக்கு 12.4 பில்லியன் டாலர் இழப்பீடு: புகையிலை நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு

புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகையிலை நிறுவனங்கள் 12.4 பில்லியன் டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இழப்பீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 79 ஆயிரத்து 155 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹைட்ஐஸ் மற்றும் ஜே.பி.ஐ. மென்டொனால்ட் ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகளுக்கு பற்றி தனது தயாரிப்புகளில் விளம்பர வாசகம்…

Read More

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு

அஸ்ரப் ஏ சமத் வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலா் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டனா். படத்தில்  அமைச்சர் னை பதியுதீன்,  கட்சியின் பொதுச் செயலாளா் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மற்றும் வரப்பத்தான் சேனை முன்னாள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் காணப்படுகின்றனா்.

Read More

என் நண்பனை புதைக்க நானே குழி தோண்டினேன் – ரோஹிங்க்யா முஸ்லிம் சகோதரர் கண்ணீர் ரிப்போட்

அபுஷெய்க் முஹம்மது 1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா . 2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் . 3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன ….

Read More

பயணத்தின் இடையில் சாதாரண பாதணி கடையில் ஜனாதிபதி…..

முன்னர் இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் மிக ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர்கள். அவர்கள் மக்கள் பணத்தையும் சேர்த்து செலவு செய்தார்கள், அவர்களின் பிள்ளைகள் அணியும் பாதணிகளின் பெறுமதி 3 இலட்சத்தை கடந்தது. அவ்வாறானவர்கள் பயன்படுத்திய இடுப்பு பட்டியின் விலை 1 இலட்சத்திற்கும் அதிகமானதாகும். இப்படியிருக்கும் போது பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்ற சாதாரண ஒருவரை இந்நாட்டு ஜனாதிபதியாக நியமித்தது இந்நாட்டு மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியாகும். இவ்வாறு நியமிக்கப்பட்ட…

Read More

அமெரிக்காவில் 7 வருட ஹிஜாப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

அமெரிக்கா, ஒக்லஹாமா மாநிலத்தில், டல்சா எனும் பிரதேசத்தில் பிரபல ஆடை விற்பனை நிறுவன நேர்முகப் பரீட்சைக்கு (2008) ஹிஜாப் அணிந்து சமூகமளித்த 17 வயது முஸ்லிம் பெண்ணொருவருக்கு ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது. ஏழு வருட போராட்டத்தின் பின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு குறித்த நிறுவனம் ஏற்கனவே தமது ஊழியர்கள் இருவரை ஹிஜாப் அணிந்தமைக்காக…

Read More

ஜனாதிபதியின் தன்சலின் போது தீப்பற்றிக்கொண்ட முச்சக்கர வண்டி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்சலை ஆரம்பித்த போது முச்சக்கர வண்டி தீப்பற்றிக்கொண்டுள்ளது. பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகாமையில் இந்த தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச மக்கள் இணைந்து தீயை அனைத்துள்ளனர். முச்சக்கர வண்டி முற்று முழுதாக தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தன்சலுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Read More