News
முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …!
பொது தேர்தலுக்கு இன்னும் எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தினங்களுக்குள் குறித்த மூவருக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தல் நிலவுதாக புலனாய்வு துறை வழங்கிய தகவலை அடுத்து…
கடந்த பாராளுமன்றத்தில் செய்த தவறை இம்முறையும் செய்ய வேண்டாம் – முஸம்மில்
– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு மேயா் முசம்மில் கொலனாவை பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பு செய்வதாக உறுதியளித்தாா். கெலானாவையில் உள்ள 24 பள்ளிவாசல் கள் அமைப்பின் தர்மாகத்தா உறுப்பினர்கள் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மிலை தெமட்டக்கொடையில் நேற்று (8)ஆம் திகதி சந்தித்தனா். இச்சந்திப்பில் உரையாற்றிய மேயா் முசம்மில் தெரிவித்தாவது – கடந்த பாராளுமன்றத் தோ்தலில் ஜ.தே.கட்சி சாா்பில் போட்டியிட்ட நான் மறைந்த மஹ்ருப் மற்றும் சபீக்…
ரங்காவின் வேட்பாளர் றிஷாத் பதியுதீனுடன் இணைவு
வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார்.எனவே இந்த தேர்தலில் அவரது ஜக்கிய தேசிய முன்னணியினை வெற்றி பெறச்செய்து எமது வன்னி மண்ணில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடியவரான அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து செயற்பட போவதாக வன்னி மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணியில் 8 இலக்கத்தில் போட்டியிடும் இரா விக்டர் ராஜ் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச்…
அமீர் அலியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக வீடுவீடாக சென்று பிரச்சாரம்
– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டதில் முதலாம் இலக்க யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வெற்றியினை பலப்படுத்தும் முகமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தனது ஆதரவாளர்களுடன் 08.08.2015 சனிக்கிழமைகல்குடா ஓட்டமவடி இரண்டாம் வட்டார கிராம சேவைக்குட்பட்ட பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று மக்களை தெளிபடுத்தும் நிகழ்வில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதனை அவதானிகக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்வில் ஓடாமவடி…
கொழும்பில் உள்ள 9000 பிச்சைக்காரர்களிடம் கைத்தொலைபேசிகள்
கொழும்பு நகரில் உள்ள பிச்சைக்காரர்களில் 9 ஆயிரம் பேரிடம் கையடக்க அலைபேசிகள் இருப்பதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்ததாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘இலங்கையில் இன்று 6 மில்லியன் ஸ்மார்ட் அலைபேசிகள் காணப்படுகின்றன. 27 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் காணப்படுகின்றன’ என்றார்.(tm)
வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது
வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை அதிகாரிகளினால் தோண்டி எடுக்கப்பட்டதாக அதேவேளை ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ள மையவாடிக்கு செல்ல எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெஹிவளை முஹியித்தீன் பள்ளிவாயலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோண்டப்படும் ஜனாஸாவை வீடியோ காட்சிகளோ, புகைப்படமோ எடுக்கக் கூடாது என தாஜுதீனின் குடும்பத்தார் பொலிஸாரிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்கவே , மேற்படி ஊடகவியலாளர்கள் மையவாடிக்குச் செல்லக் கூடாது என கண்டிப்பான உத்தரவைப் பொலிஸார் பிறப்பித்துள்ளனர். அதேவேளை ஜனாஸா அடக்கபட்டுள்ள இடத்தை சுற்றி கருப்பு நிற…
எல்லாம் இந்த வெள்ளிக்கிழமை இரவுடன் முடிகிறது..
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார செயற்பாடுகள் யாவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் இறுதிக் கட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் குருணாகல் மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டம் கொழும்பு மருதானையிலும் நடைபெறவுள்ளன. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட கட்சிகளும்…
முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீன் சாய்ந்தமருது மக்ககளால் பிரகடனம்
– அகமட் எஸ். முகைடீன் – திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில் அமைந்துள்ள ஆப்பிள் திடெலில் நேற்று முன்தினம் (8) மாலை நடைபெற்றது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இவ்வெழுச்சிக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சரிமான…
கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,பாலர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது அவர்களை நெறிபிரழா செய்வதற்கு அது இன்றியமையாததாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசி தலைவர் றிசாத் பதியுதீன் சாய்ந்தமருதுவில் கூறினார். சாய்ந்தமருதுவில் இயங்கும் கல்வி நிறுவனமான கொம்டெக் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோம பாடநெறியினை நிறைவு செய்த கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு…
சம்மாந்துறையில் நடைபெற்ற அ.இ.ம.கா. பெண்கள் மாநாடு
எமது தாய்மார்களின் கண்ணீரினாலும், துஆப்பிராத்தனையினாலும், பெருந்தலைவர் அஷ்ரபின் பெரும்முயர்ச்சியினாலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று ரவுப் ஹக்கீமின் சுயநலப்போக்கினால் திசைமாறிப் அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வருகின்ற தேர்தலில் தாய்மார்களும் ஹக்கீமுக்கு தகுந்த பாடத்தினைப் புகட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலினை ஆதரித்து…
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார்
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரத்து வரிப்பொத்தாஞ்சேனையில்…
தொழுகைக்காக வந்த அமைச்சரை தடுக்க முயன்ற மு.கா வின் வங்குரோத்து தனம்!
சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கு லுஹர் தொளுஹைக்காக வருகை தந்த ரிசாத் அமைச்சரை தடுக்க முயன்று மூக்குடைபட்டனர் மு காவின் வங்குரோத்து அரசியல் வாதியான கல்முனையின் அதிகாரி தனது வங்குரோத்து நிலைமையை இதன் மூலம் வெளிக்காட்டியுள்ளார். ரிசாத் மக்களுடன் சந்தித்து விட்டால் மக்கள் மனங்களில் இடம்பிடித்துவிடுவார் என்கிற அச்சத்தில் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் மு காவின் அரசியல் தலைமைகள். அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஜெமிலும் சிராசும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களின் பள்ளிவாசல் வருகையை தடுக்க பொலிசாரை பயன்படுத்தியும்…
