News
2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று வாசிப்பு
கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நாடாளுமன்ற நிகழ்ச்சித் திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைய திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு, ஒக்டோபர் 23ஆம் திகதி (இன்று) இடம்பெறவுள்ளது. அதனையடுத்து, வரவு – செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு) நவம்பர் மாதம் 20ஆம் திகதியும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இதற்காக 12 நாட்கள்…
உலகின் முதன்முறையாக துபாயில் 5G இன்டெர்நெட்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை தொடங்கப்பட உள்ளதாக எடிசலாட் ( Etisalat ) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மத் ஜூல்ஃபர் தெரிவித்தார். எக்ஸ்போ 2020 தொடங்கும் நேரத்தில் இந்த 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 5G நெட்வொர்க் சேவையில் அமீரகம் உலகின் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெகு விரைவில் 5G நெட்வொர்க் சேவையை பயன்படுத்த அமீரக மக்கள்…
தலித் குழந்தைகள் உயிரோடு எரிப்பு, ஒட்டுமொத்த கிராமமும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!
‘தலித் குழந்தைகள்’ உயிரோடு எரிப்பு :ஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..! ‘உயர்ஜாதி’யினரின் தாக்குதலை விட்டு தப்பிக்க ‘இஸ்லாம்’ தான் ஒரே தீர்வு..!! ‘பரீதாபாத்’ கிராம மக்கள் முடிவு…!! The arson in Sunped village of Faridabad has created fear among people, especially the lower caste community, in the adjoining villages. Due to the continuous threat posed by upper castes, a section of…
சாண்ட்விச் பையில் வைத்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
இங்கிலாந்தில் ஷரன் கிராண்ட் என்பவர் தனது 37 வயதில் முதன்முறையாக கருவுற்றார். ஏழு மாதக் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஐந்தாவது மாதத்தில் இருந்தே கருவில் குழந்தை வளராமல் போன அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை உயிருடன் மீட்டனர். இந்த பெண் குழந்தை வெறும் அரை கிலோ எடையுடனேயே இருந்தாள். மேலும், அவளது உடலின் வெப்பம் குறைந்துகொண்டே போனதால், மருத்துவர்கள் அவளை உடனடியாக டெஸ்கோ சாண்ட்விச் பையில் வைத்து அவளது…
முஸ்லிம்கள் மீள்குடியேறும்போது, அபாண்டங்களை சுமத்துவது கண்டிக்கத்தக்கது – அமைச்சர் றிஷாத்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த முறிப்பு பிரதேசத்தில் மீளக்குடியேற சென்ற போது அவர்களுக்கு எதிராக அப்பட்டமான அபாண்டங்களை சுமத்தி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேளையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செய்கின்றனர் இது வண்மையான கண்டனத்துக்குரியதாகும் என்று பாராளுமன்ற த்தில் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த மக்களது மீள்குடியேற்றத்துக்கு உதவி செய்யாவட்டாலும்,உபத்திரமாவத செய்யாதீர்கள் என பகிரங்கமாக வேண்டுகோள்விடுத்தார். இன்று பாராளுமன்ற விவாதத்தில்…
ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்
ருஹுன பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர். மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும் இணை சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் நேற்று காலி, கராப்பிட்டிய மருத்துவபீடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்பாட்டத்தின் முடிவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்த மாணவர்கள், மருத்துவபீடத்தின் முன்பாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். ருஹுணைப் பல்கலைக்கழக…
கட்டுநாயக்க விமானநிலையத்தில், 24 மணித்தியாலமும் இயங்கும் தகவல் நிலையம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு 24 மணித்தியாலமும் இயங்கும் தகவல் தொடர்பாடல் நிலையமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க போர் விமானம் இங்கிலாந்தில் விழுந்தது
அமெரிக்காவின் ராணுவப் படை ஒன்று அரபு நாடான பக்ரைன் நாட்டில் முகாமிட்டுள்ளது. இதில் கடற்படை பிரிவில் இயங்கி வந்த 6 போர் விமானங்கள் அமெரிக்காவுக்கு திரும்பி சென்றன. 6 விமானங்களும் இங்கிலாந்தில் உள்ள ஷிலே என்ற இடத்தில் தரையிறங்கிவிட்டு பின்னர் புறப்பட்டு செல்வதாக இருந்தது. அதற்காக அவை இங்கிலாந்தில் பறந்து கொண்டிருந்தன. தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அதில் ஒரு போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிரிழந்தார். இந்த விபத்து நடந்ததையடுத்து…
கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு!
வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த…
யானை தாக்கி ஆசிரியர் இர்பான் வபாத்
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார். நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதமருக்கும், ஜப்பான் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு
ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள மொட்டோ நொகுச், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட அலுவலகத்தின் பிரதிநிதியான மொட்டோ, பிரதமருடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் உள்ளூர் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் செயற்படுத்தவுள்ளமை குறித்து மொட்டோ நொகுச் பாராட்டுக்களை…
இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது: அமெரிக்கா
இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி இதனை தெரிவித்துள்ளார். வோசிங்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை உட்பட்ட பல நாடுகளின் மாற்றங்களில் ஈடுபாட்டை கொண்டுள்ளது. எனினும், அமரிக்க தலைமைத்துவத்தினால் மாத்திரம் அதன் பெறுபேறுகள் அமையவில்லை. இந்த பெறுபேறுகள் அமெரிக்க ஆதரவிலேயே கிடைத்தன என்றும் கெரி குறிப்பிட்டுள்ளார்.
