News
கொண்டயா தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப்பேச்சாளரே பொறுப்பு: நீதவான்
துனேஸ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா தொடர்பில் ஊடகங்களில் வெளயான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு என கம்பஹா நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் புகுந்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கொண்டயா மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் சந்தேக நபராகவே கருதப்படுகின்றார். சாட்சி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை…
நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் சபாநாயகர் எச்சரிக்கை
நாட்டின் நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட அமளிதுமளி நிலைமையைத் தொடர்ந்து இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க 46 லட்ச ரூபா பொதுமக்கள் பணம் செலவிடப்படுகின்றது. நாடாளுமன்றின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தினேஸ் குணவர்தன இடையூறு விளைவிக்கின்றார். நாடாளுமன்றில் விசர் ஆட்டம் ஆட இடமளிக்க முடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
ரவியின் பெயர் விவகாரம் சபையில் கடும் சர்ச்சை
நிதியமைச்சர் ரவி கருணாநாயகவின் பெயர் ரவீந்திர சந்திரேஸ் கணேசன் என பந்துல குணவர்த்தன எம்.பி.யி.னால் கூறப்பட்ட விடயம் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் அறிவித்தது போன்று தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஆளும் கட்சியினர் நேற்று சபையில் கோஷமிட்டு அழுத்தங்களைப் பிரயோகித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் எழுந்து பந்துல எம்.பி. சபையை விட்டு வெளியேற வேண்டும் என்று இடைவிடாது கோஷம் எழுப்பியதால் சபை…
எவன்கார்ட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் நாளை (இன்று) வியாழக்கிழமை சபையில் தெளிவுபடுத்தப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார். எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர திஸாநாயக எழுப்பிய கேள்விக்கு நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது…
வெளிவிவகார அமைச்சின் 13 அதிகாரிகள் பதவி நீக்கப்படவுள்ளனர்?
அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிட்டமை உட்பட சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் பணிபுரியும் 13 அதிகாரிகள் அடுத்த வாரம் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இவ்வாறு பதவி நீக்கப்பட உள்ள அதிகாரிகளில் 8 பேர் உயர் அதிகாரிகள் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்பட்டு கொண்டு வாகனம், எரிபொருள் உட்பட அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொண்டு வெறுமனே காலத்தைக் கடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த…
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்போம் : கூட்டமைப்பு
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தாலும் நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தே எமது செயற்பாடுகள் அமையும் என்று எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத் துத் தெரிவிக்கையில், ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகள் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்கான கூட்டத்துக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதனூடாக நாட்டிலுள்ள அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற் றும் ஆலோசனைகளைப்…
ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சி கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் குழுக்கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. மாலை 5.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள் ளதுடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து ஆராய்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி குழுக்கூட்டத்தை நடத்தவுள்ளார் . இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும்…
இலங்கை வந்த “அபூபக்கர்”
பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான “அபூபக்கர்” என்ற கப்பல் நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்ற போது எடுத்த படம்.
மாணவா்களுக்கு சீருடைகள் சீருடைகள் வழங்கிவைப்பு
– அஸ்ரப் ஏ சமத் – ”வி கெயாா போ யு” We Care For You பவுன்டேசனித் தலைவா் சர்ஜுன் ஆபுபக்கா் – வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் பேரியல் அஸ்ரபின் அமைச்சராக பதவி வகி்த்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிப்பாளா் சபை உறுப்பினராக பதவி வகித்தாா். அவரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த சமுக சேவை நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் படசாலை மாணவா்களுக்கு ஒரு தொகுதி…
ஷூரா சபை, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடல்
எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் 20 ஆம் திகதி இரவு கொழும்பில் இடம் பெற்றது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டிய சில ஆவணங்களை தேசிய ஷூரா சபை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியது நிகழ்வில் மிகவும் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் இடம் பெற்றன. இச்சந்திப்பின் போது நாட்டில் இடம்பெற்று வரும் சாதகமான அரசியல் கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு தேசிய…
பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து…
சீனா “சியாங்ஷன் பேரவை – 2015” நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர்
அண்மையில் பீஜிங் நகரில் நடைபெற்ற 6 ஆவது சியாங்ஷன் பேரவை (Xiangshan Forum – 2015′) நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார். இந்நிகழ்வானது சீன இராணுவ விஞ்ஞானம் சங்கம், மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான சீன நிறுவனம் என்பனவற்றின் இணை அணுசரனையுடன் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை இடம் பெற்றது. நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் துணை இராணுவ பிரதம…
