News
மீண்டும் ஈக்வேடாரில் நிலநடுக்கம்!
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று (22) மீண்டும் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து 100 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும்…
இம்முறை எவருக்கும், எந்த மன்னிப்பும் கிடையாது
காலி, சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சியில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திசாநாயக்க, ‘இதற்கு முன்னரும், கட்சிக்கு…
பொதுபல சேனாவின் நடவடிக்கையால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதா?
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஹோமாகம நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நீதவான், சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்…
மைத்திரி நூல் எழுதுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் பற்றிய நூல் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் அவர்கள் செய்தவை பற்றி இப்போது தன்னால் பேச முடியும் என்றும், இந்த விடயம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களை எழுத முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி தனக்குத் தரப்படவில்லை…
1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு
குடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளான கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமபாத், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே இந்நீர் துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்களைக் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…
சவூதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்!
சவூதி அரேபியாவில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் இனி அந்நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அந்நாட்டு தொழிற்துறை அமைச்சு இத்தகையதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தற்போது தீவிர நடைமுறைப்படுத்தலையும் தொடங்கியுள்ளது. மொபைல் சாதன தொழிற்துறை , விற்பனை , பராமரிப்பு , உதிரிப்பாகங்கள் என அனைத்திலும் இனி சவுதி நாட்டுப் பிரஜைகள் மட்டுமே பணியாற்ற முடியும். இது செப்டம்பர் மாதம் 2 முதல் முற்றாக நடைமுறைக்கு வரவுள்ளது. இச்சட்டம் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டப்படாது…
மீன் ஏற்றுமதி தடை நீக்கம்
இலங்கை மீன் வகைகள் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இலங்கை மீன் வகைகள் ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரம்: இலங்கைக்கு 141 ஆவது இடம்!
2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. குறித்த நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், ஊடக ஒடுக்கு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த வருடத்தில் இப்பட்டியலில் 165 ஆவது இடத்தினை வகித்த எமது நாடு இவ்வாண்டில்141 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளமை விசேட அம்சமாகும். மேலும் கடந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி…
மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு
– சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கொழும்பு மாவட்டத்தில் புத்துயிரூட்ட தான் திட சங்கற்பம் கொண்டுள்ளதாகவும் மக்கள் சேவகன் அமைச்சர் றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த தான் உறுதி பூண்டுள்ளதாகவும் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார். அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், சிரேஷ்ட சட்டத்தரணி என் எம்…
பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து பேச்சு
தனியார் மருத்துவம், கல்வி மற்றும் தொலைபேசிக்கட்டணம் ஆகியவற்றுக்கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே தனியார் பஸ் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நேரிடுமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். வற் வரி அதிகரிக்கப்படுமாயின் தனியார் பஸ் போக்குவரத்து கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறினார்.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது
ஒலிம்பிக் போட்டிக்கான பாரம்பரிய தீபம் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கம் கடந்த 80 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சூரிய ஒளிமூலம் ஏற்படும் வெப்பத்தை வைத்து இந்த தீபம் ஏற்றப்பட்டது. நேற்று ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் கிரேக்க திரைப்பட நடிகை முயவநசiயெ டுநாழர தீபத்தை ஏற்றினார். 2016 – ரியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆ-ம் திகதி பிரேசிலில் கோலாகலமாக தொடங்குகிறது. 17 நாட்கள் நடைபெறும்…
கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படமாட்டார் – அமெரிக்கா
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு தமிழ் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்காவில் தங்கியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அவரை அமெரிக்காவில் வைத்து கைது செய்ய வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தன. எனினும் அமெரிக்கா ரோமப்…
