News
கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு சிவபுரத்தில் கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.
ஜனாதிபதி மட்டு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முத லாம் திகதி வெள்ளிக்கிழமை ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினு லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு ள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினுலாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார்.
ஊடகவியலாளரின் தந்தை காலமானார்
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 60 ஆவது வயதில் காலமானார். இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானை வேட்டையாடிய நபர் கைது
– பேரின்பராஜா சபேஷ் – சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாவடிஓடைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவரை, ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகக் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்ஆர்பீ சேனநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த எலிசபெத் ராணி
தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் தேதி முதல் 1901–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி வரை இங்கிலாந்தின் ராணியாக ஆட்சிபீடத்தில் இருந்தார். அதாவது, அவரது ஆட்சி காலம் 63 ஆண்டுகள் 216 நாட்கள் ஆகும். ராணி விக்டோரியா தான் இதுவரை இங்கிலாந்திலேயே மிக அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்…
சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம்!
திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படும் போது அங்கு ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த முடியுமென்றும் கிராமங்களிலே உள்ள மதத் தலைவர்கள், பெரியார்கள் மற்றும் சிவில் சங்கங்களை இணைத்து இவற்றை தடுப்பது…
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பிள்ளையான் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்தார். இந்நிலையிலே் அவரை…
ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு
ஈக்குவடோரைத் தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி பலியானவர்கள் தொகை 413 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈக்குவடோரின் பசுபிக் பிராந்திய கடற்கரையை கடந்த சனிக்கிழமை தாக்கிய இந்த பூமியதிர்ச்சியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் பலியானவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்குவடோர் எதிர்கொண்ட பாரிய பூமியதிர்ச்சியாக இது விளங்குகிறது. இந்த அனர்த்தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காயமடைந்துள்ளனர். பூமியதிர்ச்சி தாக்கி இரு…
மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதி
மின்சாரம் தடைப்பட்டதனால் மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதியொருவர் 45 நிமிடங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு- 02, கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளது. கொம்பனி வீதியில் உள்ள புகையிரத வீடமைப்பு தொகுதியில் வசிக்கும் யுவதியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். குறித்த யுவதி, மின்னுயர்த்தியின் மூலமாக ஏழாவது மாடியிலிருந்து, கீழே வந்துகொண்டிருந்தபோதே, திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் இடைநடுவில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், தீயணைப்பு சேவை திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்ட தையடுத்து விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், அந்த யுவதியை மீட்டுள்ளனர். மின்னுயர்த்தியானது…
பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!
எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அத்துடன் வெ ளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்காககுறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார். சபுகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற ‘இலங்கையில் தற்போதைய பொருளாதார நிலைமை’ தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த…
சிறுவனை பணையக் கைதியாக வைத்து கொள்ளை!
17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆயுத குழுவினர், தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதோடு வீட்டில் இருந்த 17 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொச்சிக்கடை பகுதியில் விடுவித்துள்ளர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத அதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
110 கோடி ஹெரோயின் விவகாரம்!
பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14 வெளிநாட்டவர்களில் 13 பேர் உட்பட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் 14 பேரிடமும் மேலதிக விசாரணை ஒன்றினை சிறையில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் ஒருவரின்…
