News
ஐக்கிய அரபு நாடுகள் இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டாளார்
வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீதான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க பொறிமுறைகள் பல உள்ளன. இலங்கையின் அரசியலமைப்பும் வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வாரம் டுபாய் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற மூன்று நாள் கொண்ட 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த முதலீட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். உலகத்தலைவர்கள்….
பொலிஸார் – பொதுமக்களுக்கு இடையிலான உறவில் விரிசல்!
பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளை மத அனுஸ்டானங்களின் பின் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ்மா அதிபர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரின் கடமைகள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் தெளிவுப்படுத்தி்யுள்ளார்.
உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ள இலங்கை
– ரொபட் அன்டனி – ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரி்ல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ளது. குறிப்பாக 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உள்ளக…
2018 இல் மின்சார பற்றாக்குறை
இலங்கையில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
யார் இந்த பூஜித ஜயசுந்தர?
– காமிலா பேகம் – இந்நாட்டின் 34வது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர அவர்கள் , அரசியல் அமைப்பு சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று நியமிக்கப்பட்டார். புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித சேனாதி பண்டார ஜயசுந்தர அவர்கள்,1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15திகதி குருநாகலை அத்துகல்புரவில் பிறந்தார்.கண்டி தர்மராஜ கல்லூரியில் கல்வி கற்ற இவர்,ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் விசேட பட்டம் பெற்றவராவார் .பயிற்சி பெறும் உதவி…
வற்வரி தொடர்பில் பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை
வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.
உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இலங்கையில்.!
உலகளாவிய ரீதியில் நடைபெறும் 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச வர்த்தக மையம் என்பன இணைந்து “வெற்றிக்கான வர்த்தகம் : இணைப்பு, போட்டி, மாற்றம்” என்ற தலைப்பின் கீழ் இம் மாநாட்டினை நடத்த உத்தேசித்துள்ளனர். சர்வதேச வர்த்தகம் தொடர்பில் இந்நாட்டில் காணப்படும் திறந்த தன்மையினையும்…
உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெய்ட்ரீ தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 4அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்ட குறித்த சிறுத்தை புலி வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுத்தை புலியை நல்லதண்ணி வன ஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கணவனை கோடரியினால் பதம் பார்த்த பெண்.!
வவுனியா – புபுதுகம பிரதேசத்தில் கோடரியினால் வெட்டி கணவனை படுகொலை செய்த மனைவி வவுனியா பொலிஸில் சரணடைந்துள்ளார். 43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே நேற்று அதிகாலை கோடரியால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தினமும் வீட்டிற்கு மதுபோதையில் வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும், சம்பவ தினமும் இவ்வாறு மது போதையில் சண்டையிடும்போதே இந்த அனர்த்தம் நடந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வவனியா பொலிஸார் மனைவியை கைது செய்துள்ளனர்.
ஏசியன் ஜிப்சம் மோல்டிங் நிறுவனம் வவுனியாவில் அங்குரார்ப்பணம்
தனிமனிதன் ஒருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள பெரு நிறுவனமே ஏசியன் ஜிப்சம் மோல்டிங் பிரைவட் லிமிடட். வவுனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சூர் ஆப்தீன் (மஹ்சூம் ஹாஜியார்), இந்த தொழில் நிறுவனத்தை வவுனியா, நான்காம் கட்டை. ஹிஜ்ரா புறத்தில் அமைத்துள்ளார். வவுனியாவின் வரலாற்றில் இவ்வாறான ஒரு முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இந்த நிறுவனத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் எம்பிக்களான கலந்தர் மஸ்தான், நவவி, மஹ்ரூப் மற்றும் கலாநிதி அனீஸ், செட்டிக்குள…
தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதானம்..! இப்படியும் ஒரு கொள்ளைச் சம்பவம்
தம்பலகாமத்தில் நடைபெற்ற கொள்ளைப் பாணியானது மிகவும் விசித்திரமான வகையில் அமைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தம்பலகாமத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் கலந்து கொண்டு விட்டு கணவனும் மனைவியும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர். இதன் போது அவர்களின் பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அவர்களை மோதித் தள்ளியுள்ளது. விபத்துக்குள்ளான இருவரும் சுதாகரிக்கும் முன்னரே விமுந்து கிடந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி உட்பட நகைகளை பறித்துக்கொண்டு பின்னாள்…
