Headlines

இம்முறை எவருக்கும், எந்த மன்னிப்பும் கிடையாது




காலி, சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சியில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தெரிவித்தார்.
கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திசாநாயக்க, ‘இதற்கு முன்னரும், கட்சிக்கு எதிராகச் செயற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக எதுவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. அதனால், இம்முறை எவருக்கும் எந்த மன்னிப்பும் கிடையாது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *