News
හිටපු ජනපති මහින්ද රාජපක්ෂගේ ආරක්ෂාව අද ඉවතට
– නිලුපුලී- හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂට ලබාදී තිබූ හමුදා ආරක්ෂාව අද දින (ජූනි 3 ) සිට සම්පූර්ණයෙන් ඉවත් කරණ ලෙස හමුදා මූලස්ථානයෙන් දැනුම් දී තිබේ. හමුදා ආරක්ෂාවෙන් අඩක් මීට පෙර ඉවත් කළ අතර, ඉතිරිව සිටින හමුදා නිලධාරීන් ඇතුළු භට පිරිසත් අද ඉවත් කිරීමට නියෝග කර ඇති අතර ඒ අනුව හමුදා භට පිරිස අද සහ හෙට…
සිංගප්පූරු හා ශ්රී ලංකා කර්මාන්ත ඇමතිවරුන් සුහද හමුවක
– නිලුපුලී – පසුගියදා එනම් (ජූනි 1) දින ශ්රී ලංකාවේ නිළ සංචාරයක් සඳහා මෙරටට පැමිණි සිංගප්පූරුවේ කර්මාන්ත අමාත්ය එස්. ඊශ්වරන් හා කර්මාන්ත සංවර්ධන අමාත්ය රිෂාඩ් බදියුදීන් අතර පැවති සුහද හමුවේදී දෙරට අතර සීමා මායිම් රහිත ව්යාපාරික ගිවිසුමක් ඉතා ඉක්මනින් ගෙන ඒමට අදහස් කරන බව ඊශ්වරන් මහතා විසින් ප්රකාශ කරන ලදී.එසේම වරාය වැඩි දියුණු කිරීම, පානීය…
சபாநாயகர் பங்களாதேஷ் சென்றார்
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். டாக்காவில் இடம்பெற உள்ள மத நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்வதாக அவரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. சபாநாயகரின் இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பங்களாதேஷ் எதிர்கட்சி தலைவி பேகம் இர்ஷாட், அந்நாட்டின் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை, துரிதப்படுத்த ஜம்மியத்துல் உலமா அழைப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஈருலக நற்பாக்கியங்களை அவர்களுக்கு அருளவேண்டுமெனவும் பிராத்திக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஜம்இய்யா வழமைபோன்று பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. 2016.05.15ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் அசாதாரண காலநிலையைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யா பாவமன்னிப்பு, துஆ, தொழுகைபோன்ற அல்லாஹுதஆலாவின் நெருக்கத்ததைப் பெற்றுத் தரும் நல்லமல்களின்…
ரொஜர்விற்கு பிடியாணை
மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடியவால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸைத் அல்ஹுசைன் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் காரணமாக, பொலிஸாரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரொஜர் செனவிரட்ன சமுகமளிக்காத காரணத்தாலேயே அவருக்கு குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,…
மனோ கணேசனுடன், நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் சந்திப்பு
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, நாட்டின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான யதார்த்த நிலைமைகளை நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம், அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
நிதியமைச்சின் கீழ், சட்டவிரோத மதுபான ஒழிப்பு பிரிவு
சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடுப்பதற்காக, சட்டவிரோத மதுபான சோதனை பிரிவு, நிதியமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
‘எந்தவித தலையீட்டுக்கும் கீழ்படிய வேண்டாம்’
மேல் மாகணத்தில் எந்தவொரு இடத்திலும் காணிகளை நிரப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லையென அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு எதிரான எந்தவித தலையீட்டுக்கும் கீழ்படிய வேண்டாமென உத்தியோகத்தர்களுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இது தொடர்பாக நேரடித் தீர்மானங்களை எடுக்கும் உத்தியோகத்தர்கள் சார்பில் தான் தெரிபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது சம்பந்தமாக ஏற்கெனவே ஏதேனும் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தயக்கமின்றித் தனக்கு அறியத்தருமாறும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு முன்னர் மாகாணத்தில் காணிகளை நிரப்புவதற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அங்கிகாரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு…
சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்
சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது. 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.
බස්නාහිර පළාත්සභා මන්ත්රී රොජර් සෙනෙවිරත්නට වරෙන්තු
– නිලුපුලී – පාර්ලිමේන්තු මන්ත්රී විමල් වීරවංශ ඇතුළු හත් දෙනෙකුට එරෙහිව කුරුඳුවත්ත පොලිසිය විසින් කොළඹ මහේස්ත්රාත් අධිකරණය හමුවේ ගොනුකර තිබූ පැමිණිල්ල කැදවනු ලැබූ අවස්ථාවේදී කොළඹ ප්රධාන මහේස්ත්රාත් ගිහාන් පිලපිටිය විසින් බස්නාහිර පළාත් සභා මන්ත්රී රොජර් සෙනෙවිරත්නට අද දින එනම් ( ජූනි 03) වරෙන්තු නිකුත් කර ඇත.එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කොමසාරිස් සෙයිද් රාද් අල් හුසේන් කුමරු…
கல்கிசை காதி நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு பிடியாணை
-அஸ்ரப் ஏ சமத் – கல்கிசை மஜிஸ்ரேட் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் காதி நீதிமன்றத்தில் காதீநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்கிசை நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு காதீநிதாவான் தேசமான்ய எம்.வை பாவா (ஜே.பி) தெரிவித்தாா். இவ் வழக்கு சம்பந்தமாக காதீநீதாவான் தகவல் தருகையில் – திருமணம் முடித்து 2 மாதம் மனைவியையும் இருந்து விட்டு அவள் கர்ப்பவதியாகி தற்பொழுது 5 மாத குழந்தை ஒரு வருடமாக நடு வீதியில் விட்டு விட்டு, அக்குழந்தைக்கம் தாய்க்கும்…
நாவிதன்வெளி பிரதேசத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி
– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேசத்தில் புனித ரமழான் மாதம் மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மின் விளக்குகள் பொருத்தும் பணி மற்றும் திருத்தும் நவடிக்கைகளை பிரதேச சபை உழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நாவிதனவெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டியின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த காலங்களில் அதிகமான பிரதேசங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்பட்ட பிரதேசங்கள் இனங்காணப்பட்டு புதிதாக மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது. கடந்த காலங்களில் பிரதேச சபையிடம் சமூக தொண்டு அமைப்புக்கள் மற்றும் பிரதேச…
