Headlines

மனோ கணேசனுடன், நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் சந்திப்பு




நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான யதார்த்த நிலைமைகளை நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம், அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *